• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-21 18:27:19    
சீன-இந்திய நட்புறவு ஆண்டு

cri
முன்னுரை சீனாவும் இந்தியாவும் பல துறைகளில் முன்னேறிய நாடுகளாக உள்ளன. அப்படிப்பட்ட இரு நாடுகள் இந்த ஆண்டில் நட்புறவு கொள்வது ஒரு பெருமை வாய்ந்த விஷயமாகும். தமிழ் மொழி யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்ற மகாகவி பாரதியாரின் கூற்று போல் தமிழ் மொழியானது உலகெங்கும் பரவிக் கிடக்கின்றது. இத்தகைய பெருமைமிக்க தமிழ் மொழியின் மூலம் இருநாடுகளான சீனாவும் இந்தியாவும் நட்புறவு கொள்வது என்பது ஒரு மட்டற்ற மகிழ்ச்சி அல்லவா. முன்னாள் இந்தியா ஆக்கிலேயர்களிடம் பல ஆண்டுகள் அடிமைப்பட்டு பல தியாகங்களின் உதவியுடனும் மகாத்மா காந்தியின் சிறந்த பணியினாலும் இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முழு சுதந்திரம் அடைந்தது. முன்னாள் சீனா சீனா 1949ம் ஆண்டு அக்டோபர் மாதம் முழு சுதந்திரம் பெற்றது. தற்போதைய இந்தியா சுதந்திரம் அடைத்து 50 ஆண்டுகளை கடந்து வந்த இந்தியா இன்று பல துறைகளில் முன்னேறி உலகின் பல நாடுகளை வியக்க வைத்தது. உதாரணமாக இராஜஸ்தான் அணுகுண்டு சோதனை. ஏவுகணை சோதனை மற்றும் பல துறைகளில் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. தற்போதைய சீனா சுதந்திரம் அடைந்து 57 ஆண்டுகளை கடந்து வந்த சீனா இந்தியாவை காட்டிலும் மக்கள் தொகையிலும் மொத்த தேசிய வருமானத்திலும் உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி பல துறைகளில் தனது வெற்றிக் கொடியை நிலை நாட்டியுள்ளது. இதில் எனது பங்கு என்னால் இயன்றவரை எனது சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் சீனாவின் பெருமைகளையும் சீன இந்திய நட்புறவின் நன்மைகளையும் விளக்குவேன். அது மட்டுமின்றி சீனாவை எனக்கு அறிய வைத்த சீன வானொலி நிலையத்தை பற்றியும் அதில் ஒலிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சிகளையும் கேட்கச் செய்வேன். சீனாவின் பங்கு தாங்கள் சீன மக்களிடம் இந்தியாவை பற்றியும் சீன இந்திய நட்புறவின் பெருமைகளையும் எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் சீன மக்கள் இந்தியாவைப் பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள். முடிவுரை சீன இந்திய நட்புறவு உலகத்திற்கு ஒரு பெரும் சவாலாக அமையும் என்பதில் ஐயமில்லை.