இவ்வாண்டில் சீனாவில் 70 லட்சம் கார்கள் உற்பத்தி செய்து விற்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியைத் தாண்டி, அமெரிக்கா மற்றும் ஜப்பானை அடுத்து உலகில் மூன்றாவது பெரிய கார் உற்பத்தி நாடாகச் சீனா மாறும். சீனக் கார் தொழிற்துறைச் சங்கத்தின் நிரந்தர துணைத் தலைவர் Jiang Lei இன்று பெய்சிங்கில் இவ்வாறு குறிப்பிட்டார். சீனாவின் தொழில் வளர்ச்சிச் சூழலும், தொழிலின் சொந்த வளர்ச்சியும் இதற்கு முக்கியக் காரணங்களாகும் என்று அவர் விளக்கிக்கூறினார். சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் சீராகத் தொடர்வதும், நகர-கிராமப்புற மக்களின் வருமானம் இடைவிடாமல் அதிகரித்து வருவதும், தற்போது, நபர்வாரி கார் கையிருப்பு, உலகின் சராசரி நிலைக்கு குறைவாக இருப்பதும், சீனாவின் கார் தேவையின் அதிகரிப்புக்கு உத்தரவாதமும் வாய்ப்பும் வழங்கியுள்ளன. அதே வேளையில், உள்நாட்டில், கார் தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் விரிவாக்கப்பட்டன, அல்லது சீராக்கப்பட்டன. இதனால், புதிய உற்பத்தி ஆற்றல் உருவெடுத்துள்ளது. விரைவாக வளரும் கார் சந்தையின் தேவையை இது நிறைவு செய்துள்ளது என்று Jiang Lei கருத்து தெரிவித்தார்.
|