ஆசிய விளையாட்டு போட்டிகளின் டென்னிஸ் விளையாட்டில் சீனாவும், இந்தியாவும்
டென்னிஸ் விளையாட்டில் ஆசிய அளவில் சீனாவும் இந்தியாவும் முன்னோடிகளாக, மேன்மைகொண்டவையாக உள்ளன என்பதை கடந்த வாரம் முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்பித்துள்ளன. ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்திலான தங பதக்கம் தவிர்த்து மற்ற அனைத்து பிரிவிவிலும் ஒன்றேல் சீனா அல்லது இந்தியா தங்கம் வென்றுள்ளன. பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஆசிய அளவிலான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள சங் ஜியேவும் நான்காம் இடத்தில் உள்ள இந்தியாவின் சானியா மிர்சாவும் தஙத்திற்காக மோதினர். முன்னதாக ஆசிய அளவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சீனாவின் லீ நாவை சானியா வென்றதால் கடுமையான போட்டியாக அமையும் என்பது உறுதியானது. இந்திய ரசிகர்களின் ஆரவாரமான ஆதரவுக்கு இடையிலும் கவனத்தை சிதறவிடாமல் சீனாவின் சங் ஜியே 6 - 4, 1 - 6, 6 - 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். தங்கம் சீனாவுக்கும், வெள்ளி இந்தியாவுக்கும் கிடைத்தது.
ஆடவர் இரட்டையார் ஆட்டத்தில் இந்திய இணை லியான்டர் பெயஸ், மகேஷ் பூபதி ஆகியோர் 5 - 7, 7 - 6, 6 - 3 என்ற செட்களில் தாய்லாந்து இணையான ரத்திவானா சகோதரர்களை வென்று தங்கம் பெற்றது. பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் சீன இணை சங் ஜியே மற்றும் யான் ஸி , தைவானின் சன் யுங் ஜான், சுவான் சியா ஜுங் இணையை வென்று தங்கம் பெற்றது.
கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்திய இணை லியாண்டர் பெயஸ், சானியா மிர்சா இருவரும் முறையே ஆடவர் இரட்டையர் மற்றும் பெண்கள் ஒற்றையர் இறுதியாட்டத்தில் ஆடி முடித்த சில மணி நேரத்திற்குள்ளாக கலப்பு இரட்டையார் ஆட்டத்தின் இறுதி போட்டியில் பங்கேற்றனர். ஆனால் களைப்பும் சோர்வும் வெளிப்படாமல் ஜப்பானின் சதோஷி இவாபுச்சி, அகிகோ மொரிகாமி இணையை 7 - 5, 5 - 7, 6 - 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம வென்றனர்.
2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள்
2008ம் ஆண்டு பெய்சிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை கண்டுகளிக்கவென பெய்சிங் மாநகருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை சமாளிப்பதற்கென வருகின்ற 2007ம் ஆண்டில் மார்ச் திங்கள் தொடக்கம் பெய்சிங் சுற்றுலா நிர்வாகத்தினர் ஹோட்டல் மற்றும் இதர தங்குமிடங்களின் முன்பதிவை இணையத்தில் தொடங்கவுள்ளனர். பெய்சிங் மாநகர சுற்றுலாத் துறையின் இணையதளம் 29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் இணையதளத்தோடு இணைக்கப்படும் என்றும், ஒலிம்பிக் போட்டிகளை பற்றிய தகவல் பெற உதவும் அந்த தளத்தில் உள்ள சுட்டியை சொடுக்கி பெய்சிங்கில் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்றும் பெய்சிங் மாநகர சுற்றுலாத் துறையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த இணையதளத்தில் குறைந்த வாடகையில் கிடைக்கும் சுமார் 1000 ஹோட்டல்கள் பரிந்துரைக்கப்படும். குறிப்பிட்ட ஹோட்டலின் நிழற்படங்கள், வாடகை விபரங்கள் எல்லாம் சீன மொழி, ஆங்கில மொழி மற்றும் பிரெஞ்சு மொழிகளில் இடம்பெறும்.
17 நாட்கள் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் போது குறைந்தது 5 லட்சம் பயணியர் பெய்சிங் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டின் 11 திங்களில் மட்டும் 30 லட்சம் வெளின்காட்டினர் பெய்சிங் மாநகருக்கு வந்து சென்றுள்ளதாக தெரிகிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 7.5 விழுக்காடு அதிகம். தற்போது பெய்சிங்கில் 674 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. 2008ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 800 ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|