சீன வானொலி நிலையம், நேயர்களே இன்றைய சீன மகளிர் நிகழ்ச்சியில், தொண்டர் சோ யா அம்மையர் பற்றி உங்களிடம் அறிமுகப்படுத்துகிறோம்.
சோ யா, இப்போது 60 வயதான ஓய்வு பெற்றவராவார். அவர் ஒளிமயமான புன்சிரிப்பைக் கண்டால் பலர் அவருடைய சரியான வயதை கணிக்க முடியாது. ஓய்வு பெற்ற பின், சீன தேசிய பொருட்காட்சியகம், பெய்சிங் அரண்மனை அருங்காட்சியகம், சீன நூற்றாண்டு மாளிகை ஆகியவற்றில் தொண்டர் என்ற முறையில் விளக்கம் கூறுபவராக பணியாற்றுகிறார். அவர், சீன தேசிய பொருட்காட்சியகத்தின் முதலாவது புகழ்பெற்ற பணியாளராவார். பல ரசிகர்கள் அவரின் விளக்கத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
இத்தாலிய கலை மறுமலர்ச்சி பொருட்காட்சி அண்மையில், பெய்சிங்கிலுள்ள சீன நூற்றாண்டு மாளிகையில் நடைபெற்றது. இத்தாலியின் கலை மறுமலர்ச்சி மீட்பதன் காலத்தைச் சேர்ந்த பல கலைஞர்களின் படைப்புகள் இந்த பொருட்காட்சியில் இடம் பெறுகின்றன. இது மிக அரிய கலை பொருட்காட்சியாகும். பல சீன ரசிகர்கள் இதை பார்வையிட்டனர். பொருட்காட்சி அறையில் கணிரென்ற விளக்கம் ஒலிக்கிறது, இந்த விளக்கம், பலர், இந்த அரிய கலை பொருட்களை ஆழமாக அறிந்துக் கொள்வதற்கு துணை புரிகிறது.
இந்த விளக்கி கூறிவர், சோ யா அம்மையார். ரசிகர்கள் அவரை உடனே சூழ்ந்து கொண்டனர். அவருடைய விளக்கம் அழகானது. தெளிவானது. அவருடைய விளக்கத்தில், வரலாற்று உண்மைகள் வெளிப்படுகின்றன. படைப்புகள் கலை பொருட்களின் தயாரிப்பாளர், தற்போது வடிவமைக்கப்பட்ட பண்பாட்டுச் சூழல், வரலாற்று பின்னணி ஆகியவற்றை அவர் விரிவாக விளக்கி கூறினார். மிக நன்றாக இருக்கிறது. இத்தாலிய கலை மறுமலர்ச்சி பற்றி பேசியதோடு, சீனாவின் தொல் பொருள் பாதுகாப்பு, கல்வி பிரச்சினை ஆகியவற்றையும் அவர் சுட்டிகாட்டினார். அவரின் வழிகாட்டல் மூலம், ரசிகர்கள், முன்னர் கேட்டறஇயாத பல சிறிய விவரங்களை கவனித்தார்கள். இதன் விளைவாக, கலைப் பொருட்களின் அதிகமான மதிப்பையும் மேலும் உணர முடிந்தது.
இதைப் பற்றி பேசுகையில் சோ யா கூறியதாவது
எல்லா அழகான நிகழ்ச்சிகளையும் நான் அனைவருடன் சேர்ந்து ரசிக்க விரும்புகிறேன். குறிப்பாக, நான் உணர்ந்த மதிப்பு, எல்லோருடன் சேர்ந்து ரசிப்பது என்பது, ஒரு இயக்கு ஆற்றல் ஆகும் என்றார்.
|