• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-02-02 12:00:40    
சீனாவின் உணவுப்பொருள் பண்பாடு

cri

சீனாவின் உணவுப்பொருள் பண்பாடு நீண்டகால வரலாறுடையது. சீனாவில், சீன உணவுகளை சுவை பார்க்கும் போது, பயணிகள் ருசியான சீன கறிகளை உட்கொண்டு மகிழலாம். அன்றி, சீன உணவுப் பொருள் பம்பாட்டையும் புரிந்து கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக, சிஅன் நகரில், புகழ்பெற்ற சியொ சி விருந்து உண்டு. சியொ சி என்றால், சீன மக்கள், குறிப்பாக, வட சீன மக்கள் விரும்பி உட்கொள்ளும் ஒரு வகை உணவாகும். சிறப்பாக, புத்தாண்டு விழா நாட்களில், அனைவரும் சியொ சியை, அதாவது, இறைச்சிக் கொழுக்கட்டை செய்து உட்கொள்வார்கள்.

சி அன் நகரம், இவ்விருந்தை பயணிகளுக்கு அளித்த பின், இது மிகவும் வரவேற்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுப் பயணிகள், வேறு வகையான சியொ சிகளைச் சுவை பார்க்க முடிந்ததை வியந்து பாராட்டியுள்ளனர்.

வெளிநாட்டுப் பயணிகள் சீனாவில் சுற்றுலா மேற்கொள்ளும் போது, எங்கு இருந்தாலும், உள்ளூர் தனிச்சிறப்பியல்பு உடைய சுவையான உணவுப்பொருட்களை உட்கொண்டு மகிழலாம்.

பயணிகள், பல்லாயிரம் ஆண்டு கால நாகரிக வரலாறு, தொல்பொருள் சிதிலங்கள் மற்றும் கம்பீரமான எழிலான மலைகள் மற்றும் ஆறுகளைக் கண்டுகளிக்கலாம். விருந்தோம்பல் மிக்க சீன மக்களுடன் கலந்துரையாடலாம். சீனாவின் அறு சுவை உணவுகளை ருசி பார்க்கலாம்.