• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Tuesday    Apr 8th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-25 16:37:10    
பெருநிலப்பகுதியில் தைவான் வேளாண் தொழிலின் வளர்ச்சி

cri

இக்கருத்தரங்கில், இரு கரை வேளாண் ஒத்துழைப்பை மேம்படுத்தும் பல பதிய நடவடிக்கைகளை பெருநிலப்பகுதி தொகுத்து வெளியிட்டுள்ளது. இரு கரை வேளாண் ஒத்துழைப்புச் சோதனை மண்டலத்தையும், தைவான் விவசாயிகள் தொழிலைத் துவக்கும் மண்டலத்தையும் நிறுவுவது, இரு கரை வேளாண் உற்பத்தி பொருட்களின் வர்த்தக வசதிமயமாகத்தை மேம்படுத்துவது, இரு கரை வேளாண் துறையில் அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்றத்தை வலுப்படுத்துவது முதலியவை இதில் இடம்பெறுகின்றன.

இந்த புதிய நடவடிக்கைகள், இரு கரை வேளாண்மை ஒத்துழைப்புக்கு மேலும் நல்ல சூழலை உருவாக்கும் என்று, இரு கரை வேளாண்மை ஒத்துழைப்பில் கவனம் செலுத்தி வரும் தைவானின் நிபுணர் CHEN WU XIONG கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:

தைவான் உடன்பிறப்புகள் பெருநிலப்பகுதியில் முதலீடு செய்வதற்கு, இத்திட்டப்பணிகள் மேலும் அதிகமான வசதிகளையும் காப்புறுதியையும் வழங்கியுள்ளன. இந்தச் சாதகமான நிலைமையிலும், நிலம், நிதி, உழைப்பாளர், தொழில் நுட்பம், நிர்வாகம் உள்ளிட்ட ஒன்றிடம் இல்லாததை மற்றது நிறைவு செய்யும் மேம்பாடுகளிலும், புதிய ஒத்துழைப்புத் திட்டப்பணிகள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படுவதாக நினைக்கின்றேன் என்றார் அவர்.

கடந்த ஆண்டின் இறுதி வரை, சோதனை மண்டலத்தில் தைவானின் வேளாண் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, ஆயிரத்து என்னூற்றைத் தாண்டியுள்ளது. இந்தத் தொழில் நிறுவனங்கள் பொதுவாக நல்ல பயன் பெற்றுள்ளன.

இக்கருத்தரங்கில் உரை நிகழ்த்திய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் தைவான் விவகாரப் அலுவலகத்தின் இயக்குனர் CHEN YUN LIN, தைவானின் விவசாயிகளும் வேளாண் தொழில் நிறுவனங்களும் பெருநிலப்பகுதியில் முதலீடு செய்து, தொழில் புரியும் பொருட்டு, பெருநிலப்பகுதி, தொடர்புடைய மண்டலங்களின் கட்டுமானத்தை வலுப்படுத்தி, சீரான உற்பத்தி மற்றும் வணிகச் சூழலை வழங்க பாடுபடும் என்று தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

இந்த மண்டலங்களிலுள்ள தைவான் முதலீட்டு வேளாண் தொழில் நிறுவனங்களின் மீதான பரிசீலனை மற்றும் ஏற்றுக்கொள்ளும் விதிமுறைகள் எளிதாக்கப்படும். தைவான் விவசாயிகள் தொழிலைத் துவக்கும் மண்டலங்களில் அடிப்படை வசதிக் கட்டுமானத்துக்கு ஆக்கப்பூர்வமான நிதி ஆதரவு அளிக்கப்படும். முக்கிய புதிய உயர் தொழில் நுட்ப வேளாண்மை திட்டப்பணிகளுக்கு, முதலில் உதவி அளிக்கப்படும் என்றார் அவர்.

இரு கரை வேளாண் உற்பத்தி பொருட்களின் வர்த்தக வசதிமயமாக்கத்தை மேம்படுத்துவது, பெருநிலப்பகுதியின் நிலையான கொள்கையாகும். நடப்புக் கருத்தரங்கில், தைவானின் வேளாண் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்யும் நடைமுறைகளை எளிதாக்கி, நெடுஞ்சாலை போக்குவரத்துத் தடையில்லாத பாதையை மேலும் மேம்படுத்த, பெருநிலப்பகுதி பல நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.

தைவானின் வேளாண் வணிகர்களைப் பொறுத்தவரை, இக்கருத்தரங்கின் வெற்றி, மேலும் அதிகமான வாய்ப்பைக் கொண்டு வரும். தைவானின் DA CHENG குழுமத்தின் வடக்கிழக்காசிய வட்டாரத்தின் நிர்வாக ஆளுனர் CHEN FU SHI எமது செய்தியாளரிடம் பேசுகையில், வேளாண் தொழில் நுட்பத்தில் இருகரை தொடர்பை வலுப்படுத்துவது என்ற கருத்து, தமது தொழில் நிறுவனங்களுக்கு புதிய வளர்ச்சித் திசையைக் காட்டும் என்று தெரிவித்தார்.

இக்கருத்தரங்கு நிறைவடைந்த பிறகு, பெருநிலப்பகுதி, உரிய நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு, கருத்தரங்கில் பெற்றுள்ள வெற்றிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது என்று எமது செய்தியாளர் ஒருவர் தொரிவித்தார்.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040