• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-25 21:51:04    
உலகை சுற்றி ஓட்டம்

cri

மான்ஃபிரட் மிச்லிட்ஸ் என்ற 38 வயதான ஆஸ்திரிய நாட்டவர் குழந்தைகள் நல சமூகச் சேவை நிறுவனம் உலகை ஓட்டத்தால் சுற்றி வர முடிவு செய்துள்ளார். வரும் ஜனவரி முதல் நாள் அவர் ஆஸ்திரியாவின் வியன்னா நகரிலிருந்து புறப்பட்டு கஙேரி நாட்டு புடபெஸ்ட் வழியாக துருக்கி சென்று அதன்பின் சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா வழியாக அடுத்த டிசம்பர் 31ம் நாள் வியென்னா திரும்புவார். கிட்டத்தட்ட 23 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை இவர் ஓடிக்க கடப்பார். ஆண்டு முழுவதுமாக அமைந்த இந்த ஓட்டத்தில் 40 நாடுகள் மற்ரும் பிரதேசங்களை இவர் 365 நாட்களில் கடப்பார். சராசரியா ஒரு நாளில் இவர் இரண்டு நெடுந்தூர ஓட்டம் அதாவது மாராத்தான் ஓட்டங்களை செய்யவேண்டும். விளங்கச் சொன்னால் இவர் நாள்தோறும் 80 கிமீ ஓடவேண்டும். கண்டம் விட்டு கண்டம் செல்லும்போது மட்டும் விமானங்களில் பயணம் செய்வார், மற்றபடி தன் கால்களே தனக்குதவியாக ஓடியே உலகை இவர் சுற்றி வர இருக்கிறார். உலக கொடையளிப்பு ஓட்டம் 2007 என்று அழைக்கப்படும் இந்த உலகை சுற்றி வரும் ஓட்டத்திற்கென 2004ம் ஆண்டு முதல் மான்ஃபிரட் மிச்லிட்ஸ் தன்னை தயாரித்து வருகிறார். இன்க்த திட்டம் 5 லட்சம் யூரோ செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இன்க்த தொகைக்கு கூடுதலாக வரும் அனைத்து கொடையளிப்புகளும், நிதியுதவிகளும் குழன்க்தைகள் நல சமூக சேவை நிறுவனத்துக்கு வழங்கப்படும்.

கால்பந்தாட்ட விருதுகள்:

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதுகள் அன்மையில் வழங்கப்பட்டன. இத்தாலியை உலகக் கோப்பைக்கு வழி நடத்திச் சென்ற இத்தாலிய அணியின் தலைவரும், ஸ்பெயின் நாட்டு ரியல் மாட்ரிட் கால்பந்து மன்றத்தின் வீரருமான ஃபாபியோ கானவாரோ இவ்வாண்டுக்கான தலைசிறன்க்த கால்பந்து நட்சத்திரமாக, விளையாட்டு வீரராக, உலக நாடுகளின் கால்பந்து அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் அணித்தலைவர்கள் அளித்த வாக்குகளில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த கால்பந்து வீராங்கனையாக பிரேசில் நாட்டு மார்த்தா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பலரும் எதிர்பார்த்த பிரேசில் நாட்டு ரொனால்டின்யோ, பிரான்ஸ் நாட்டு சினெதேன் சிதான் ஆகியோரைக் காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றதால் இத்தாலிய தேசிய கால்பந்து அணியின் தலைவரான ஃபாபியோ கானவாரோ இவ்வாண்டுக்கான சிறந்த வீரராக தேர்வானார்.

உலக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனியின் மிரோஸ்லோவ் க்ளோஸ், அர்ஜென்டினாவின் கெர்னான் கிரெஸ்போ, பிரேசிலின் ரொனால்டோ ஆகியோர் தங்ம், வெள்ளி மற்றும் வெண்கலக் காலணிகள் அளிக்கப்பட்டனர்.

சினெதேன் சிதான், அன்க்திரியா பிர்லோ மற்றும் ஃபாபியோ கானாவாரோ ஆகியோர் முறையே தஙம், வெள்ளி மற்றும் வெண்கல பந்துகளை பெற்றனர்.

2006ம் ஆண்டின் தலைசிறந்த அணியாக பிரேசில் அணி தேர்ந்தெடுக்கப்பட்டது.