மேற்கு சீனாவில் அந்நிய முதலீட்டு ஈர்ப்பு
cri
சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் முழு கட்டமைப்பில், கொள்முதல் செய்வது, இணைத்து கொள்வது ஆகியவை, அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கான ஒரு புதிய முக்கிய வடிவமாக திகழ்வதாக, பொ ஓ ஆசியக் கருத்தரங்கின் தலைமை செயலர் Long Yong Tu கூறியுள்ளார். சீனாவின் மத்திய மற்றும் மேற்கு பகுதிப் பிரதேசத்துக்கு இது, புதிய வளர்ச்சி வாய்ப்பினை கொண்டு வரும் என்றார், அவர். முன்பு, அந்நிய முதலீட்டாளர்கள் சீனாவுக்கு நுழைந்த பின், முக்கியமாக, முதலிட்டு, தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர். இனிமேல், இணைத்துக் கொள்வது என்ற முறை, மேலதிகமாக மேற்கொள்ளப்படும். அந்நிய முதலீட்டை ஈர்ப்பது என்பது, நீண்டகாலமாக, மத்திய மற்றும் மேற்கு பகுதியில் நிதியை திரட்டி, வளர்ச்சியை வேகமாக்கும் முக்கிய வடிவமாக மாறும் என்று அவர் சொன்னார். நேற்கு மேற்கு சீனாவின் Gui Yang நகரில் நடைபெற்ற முதலாவது Gui Zhou தொழில் நிறுவனத்து வளர்ச்சி பற்றிய கருத்தரங்கில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முதலீட்டுக்கான சிறந்த சூழலை மேம்படுத்தி உருவாக்குவது, தற்போதும் இப்பிரதேசத்திற்கு முதல் தேவையாகும். அரசு வழங்கும் சேவைச் செலவைக் குறைப்பது, சட்ட அமைப்பு சூழலை மேம்படுத்துவது முதலியவற்றில் சீரான நிலை காணப்பட முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.
|
|