தா ஜிங் ரயில் பாதை போக்குவரத்து கடமை
cri
தா ஜிங் ரயில்பாதையின் 2006ம் ஆண்டு போக்குவரத்து அளவான 25 கோடி டன் என்ற இலக்கு, நேற்று பிற்பகல் 6 மணிக்கு ஒரு வாரம் முன்னதாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சீன ரயில்பாதையின் கனத்த போக்குவரத்து ஆற்றல், உலகின் முன்னேறிய அணியில் சேர்ந்துள்ளதை இது கோடிட்டுக் காட்டுகின்றது. மேற்காக, வட சீனாவின் சாங் சி மாநிலத்து தா துங் முதல் கிழக்காக He Bei மாநிலத்து Qin Huang Dao வரையான இந்த தா ஜிங் ரயில்பாதை, சாங் சி, ஷாங் சி, உள்மங்கோலியாவின் மேற்கு பகுதி முதலிய பிரதேசங்களிலிருந்து நிலக்கரி வெளியே கொண்டு வரப்படும் முக்கிய பாதையாகும். இவ்வாண்டில், அதன் உச்சி நாள் போக்குவரத்து அளவு, 7 லட்சத்து 90 ஆயிரம் டன் ஆகும். சீனாவில் நிலக்கரி, மின்சாரம் மற்றும் எண்ணெய் போக்குவரத்தில் நிலவும் பற்றாக்குறையைத் தணிப்பதற்கு இது செயலாக்க பங்கையாற்றியுள்ளது. 25 கோடி முதல் 30 கோடி டன் ஆண்டு போக்குவரத்து ஆற்றல் தற்போது இந்த ரயில் பாதைக்கு உண்டு என்று சீன ரயில்பாதை அமைச்சின் தொடர்புடைய பொறுப்பாளர் கூறினார்.
|
|