• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-26 08:46:49    
சுவையான வாழ்க்கை

cri
மனித வாழ்க்கை மிகவும் சுவையானது. Suan, Tian, Ku, La என்கிறார்கள் சீனர்கள். பிறப்பு முதல் இறப்பு வரை. புளிப்பும் இனிப்பும் கசப்பும் காரமும் கலந்த வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை இன்பங்கள், எத்தனை எத்தனை துன்பங்கள். காரசாரமாகப் பேசுகிறோம். யாராவது நம்மை இழிவுபடுத்தினால் மனக்கசப்பு அடைகிறோம். நாம் நினைத்தது எல்லாம் நடந்து விட்டால் வாழ்க்கை இனிப்பாக இருக்கிறது. ஆனால் புளிப்பு? சீனர்கள் புளிப்பை Suan என்கிறார்கள். நாம் துக்கமாக இருக்கும் போது நமது இதயம் புளிப்பாக இருக்குமாம்-Xin Suan. இதயம் புளிக்கும் என்பது தமிழர்களுக்கு வித்தியாசமான அனுபவம் அல்லவா? அதே போல, அழுகை முட்டிக்கொண்டு வரும் போது மூக்கும் புணிப்பாக இருக்குமாம்-Bi Zi Yi Suan. வேலை செய்து களைத்துப் போனால் கால், கைகளும் இடுப்பும் புளிக்குமாம்-Yao/Tui Suan.

யாராவது நம்மைக் கடிந்து கொண்டு குறைகூறினால் நமக்கு மனக் கசப்பு ஏற்படுகிறது. ஆனால் சீனர்களுக்கு மனக்கசப்பு அல்லது இதயக் கசப்பு ஏற்படுவது சிரமப்பட்டு ஒரு வேலையைச் செய்யும் போது, Ku Xin Jing Ying. அதாவது, கஷ்டப்பட்டு வேலை செய்வது கசப்பான இதயத்தைச் சுமப்பது போன்றதாம். நீண்ட நேரம் கடுமையாகச் சிந்திக்கும் போதும் மனம் கசக்கிறது என்கிறார்கள். சீனர்கள்-Ku Si Ming Xiang-அதாவது கசப்பான மனதில் ஆழ்ந்த சிந்தனையாம். நீங்கள் யாரையாவது கடிந்து பேசும் போது உங்கள் வாய் கசக்குமாம். அப்போது உங்களுக்கு இருப்பது பாட்டியின் இதயமாம்-Ku Kou Po Xin. எப்போதுமே பெரியவர்கள் நமக்கு அறிவுரை சொன்னால் நமக்குப் பிடிப்பதில்லை ஏ! இழடு மேசாம மூலையில் முடங்துக்கிடு என்கிறோம். ஏனென்றால் மூத்தோரின் அறிவுரை மருந்தைப் போன்றது. மருந்து எப்போதுமே கசக்கத்தானே செய்யும்-Liang Yao Ku Kou-கசப்பான மருந்து இனிப்பை விட நல்லது.

வாயினிக்கப் பேசுவார்கள் சிலர். அவர்களுடைய வார்த்தையிலே தேனொழுகும்-Tian Yan Mi Yu-ஆனால் மனக்கசப்பை மறைத்து விடுவார்கள். அன்பு உண்மையானால் இன்பமும் துன்பமும்-அதாவது இனிப்பும் கசப்பும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்-Tong Gan Gong Ku-அப்போது தான் கசப்பெல்லாம் மறையும். இனிபை நிறையும்-Ku Jin Gan Lai.