சீன மக்கள் கூடுதலான சிகிச்சை செலவை எதிர்நோக்க வேண்டியிருந்தது. சுமார் 50 விழுக்காட்டு மக்கள் நோய்வாய்பட்ட போது சிகிச்சை விரும்ப வில்லை என்று 2005ம் ஆண்டில் சீன சுகாதார அமைச்சகம் வெளியிட்ட கள ஆய்வு தெரிவிக்கிற்து. இந்த பிரச்சினையை தீர்க்க சீனாவின் பல்வேறு நிலை அரசாங்கங்கள் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளன. 2005ம் ஆண்டில் சீனாவின் பெய்சிங் மாநகரின் ஹைதியன் வட்டார அரசு நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கான சாந்தி என்னும் மருத்துவ மனையை நிறுவியது. இந்த மருத்துவ மனை இயங்கத் தொடங்கிய ஓராண்டில் உள்ளூர் மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

மேற்கு சீனாவினந் சுங்சிங் நகரை ஒட்டியுள்ள கிராமத்தைச் சேர்ந்த கெ மின் யே அம்மையார் 5 ஆண்டுகளுக்கு முன் பெய்சிங் வந்து வேலை செய்தார். அண்மையில் ரத்த புற்று நோய் அவருக்கு ஏற்பட்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டது. சிகிச்சைக்கு செலவு அதிகம். இது பற்றி அவர் கூறியதாவது.

சிகிச்சை பெற நான் எவ்வளவு கட்ட வேண்டும்.. எட்டாயிரம் யுவான் என்று டாக்டர் பதிலளித்ததுவுடன் நிற்க முடியாது என்று பயப்பட்டேன். அழுந்தேன் என்றார். அதிகமான சிகிச்சை செலவை கேட்ட கெ மின் யே சிகிச்சை பெற மறுத்தார். வீட்டில் ரத்த புற்று நோய் பற்றிய புத்தகம் படித்தார். இரண்டு ஆண்டுகள் கழிந்த பின் அவருடைய நோய் கடுமையாகிவிட்டது. மருத்துவ மனைக்கு போய் சிகிச்சை பெறுவதற்கான கட்டணம் பற்றி விசாரித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட மேலும் கூடுதலாக இருந்தது. கெ மின் யே போல பலர் நோய்வாய்ப்பட்ட துவக்கத்தில் தாமதமின்றி டாக்டரை பார்க்க வில்லை. அதன் விளைவாக நோய் மேலும் தீவிரமானது. கடையில் நிறையச் செலவு செய்ய வேண்டியிருந்தது. இது போன்ற சூழ்நிலையை எப்படி தடுப்பது?மக்களுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சைக்கு உத்தரவாதம் அளிப்பதாகும். ஏழை மக்கள் நோய்வாய்படும் போது சிகிச்சை பெற உதவ வேண்டும் என்று சாந்தி மருத்துவ மனையை தோற்றுவித்தவர்களில் ஒருவரான யூ சியோ சியென் கூறினார்.

சாதாரண மக்கள் நோய்வாய்படும் போது சிகிச்சை பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவர் தனியாக வீட்டில் துன்பப்படுவதை தடுக்க வேண்டும் என்றார் அவர். இந்த நோக்கத்துடன் 2005ம் ஆண்டில் ஹைதியென் சுகாதார ஆணையின் தலைவரான யு சியோ சியென் உள்ளிட்ட சிலர் பெய்சிங்கில் மக்களுக்கு நன்மை தரும் முதலாவது மருத்துவ மனை---சாந்தி மருத்துவ மனையை நிறுவினார்கள். இந்த மருத்துவ மனை லட்சக்கணகான விவசாயிகளும் பத்தாயிரத்துக்கு அதிகமான ஏழை மக்களும் வாழ்கின்ற ஹைதியன் வட்டாரத்தில் நிறுவப்பபட்டது.
|