• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-27 14:14:07    
ச்சிங்குள்ளர்

cri
அரசவைத் தேர்வில் வெற்றி பெற்ற மமதையுடன் ச்சிங் ஊர்சுற்றிக்கொண்டிருந்தான். அவனுடைய அந்தஸ்துதான் உயரம். ஆள் உயரமல்ல. எல்லோரும் ச்சிங் குள்ளன். ச்சிங் குள்ளன் என்று கேலி பேசினார்கள். ஒரு முறை பொயோங் ஏரிக்கரையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, வழிப்பறிக்கொள்ளைக் காரன் ஒருவன் எதிர்ப்பட்டான்.

'இன்னைக்கு வசமான வேட்டை சிக்கியிருக்குது' என்று மகிழ்ந்த அவன், ச்சிங் குள்ளரிடம் இருந்த பணம், நகை எல்லாவற்றையும் பறித்துக் கொண்டான்.

அப்போது 'யப்பா நான் யாருன்னு தெரிஞ்சா நீ இப்படி பண்ண மாட்டே' என்றார் ச்சிங்.

'நீ யாரா இருந்தா எனக்கென்ன?' என்றான் கொள்ளைக் காரன் முரட்டுக் குரலில்.

'இந்தா பாரு நான் ராஜாவுக்கு ரொம்ப வேண்டியவன். அரசவைத் தேர்வுல ராஜா என்னைத்தான் தேர்வு செய்திருக்காரு' என்று சொன்னதும், திருடனுக்கு வயிற்றைக் கலக்கியது. 'சரி இந்த ஆளை விட்டுவச்சா ஆபத்து. போட்டுத் தள்ளிர வேண்டியது தான்' என்று தீர்மானித்து, வாளை ஓங்கினான். உடனே ச்சிங் அவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடியே உனக்கு கோடிப் புண்ணியமாப் போகும் என் தலையை மட்டும் வெட்ட வேண்டாம் என்று கெஞ்சினார்.

'எதனால தலையை வெட்டக்கூடாது?' என்று கேட்டான் கொள்ளைக் காரன்.

'அம்மாவே என்னை ச்சிங்குள்ளர் என்று எல்லோரும் கேலி செய்றாங்க. நீ என் தலையை வெட்டுனா நான் இன்னும் குள்ளமாவேன். மக்கள் நிறையக் கேலி செய்வாங்க' என்று சொன்னதும் கொள்ளையனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. பிழைத்துப் போ என்கிற மாதிரி வாளை விட்டெறிந்தான்.

சிவப்பு வெளுப்பும்

சீனாவிலே சிவப்பு நிறம் மகிழ்ச்சியையும், வெள்ளை நிறம் துக்கத்தையும் குறிக்கும். ஒரு நண்பர்-எடுத்ததற்கு எல்லாம் குதர்க்கமாகவே பேசுகிறவர்-சமீபத்தில் அவருடைய அன்னை இறந்து விட்டார். துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தேன். அப்போது ஒரு பெரிய அறிஞரும் துக்கம் விசாரிக்க வந்திருந்தார். அந்த நேரம் பார்த்து, நண்பர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவருடைய உணவுத்தட்டில் சிவப்பு அரிசிச்சோறு. அதைக் கண்டதும் அறிஞரின் முகம் கோபத்தால் சிவந்தது.

இதென்ன அநியாயம்?

சிவப்பு அரிசி சோற்றைத் தின்கிறாயே என்று கடிந்து கொண்டார். ஏன் திங்கக் கூடாதா?என்று அப்பாவித்தனமாகக் கேட்டார் நண்பர். உனக்குத் தெரியாதா? சிவப்பு சந்தோஷத்துக்கு அடையாளம். உன் அம்மா இறந்த நேரத்துல சிவப்பு அரிசிச் சோறு தின்னலாமா? என்றார்.

சீனாவில் எல்லாரும் எல்லா நாட்களும் வெள்ளை அரிசிச் சோறுதான் சாப்பிடுறாங்க. அப்படியானால் அவங்க வீட்டுல தினமும் எழவு விழுகுதா? என்று குதர்க்கமாக எதிர்க்கேள்வி போட்டார் நண்பர்.