• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-26 20:00:28    
உண்மை மனிதனை போன்ற இயந்திர மனிதன்

cri

அக்டோபர் 11ஆம் நாள், 19வது அறிவு திறனுடைய இயந்திர மனிதன்களும் அவற்றின் வரைவு தொகுதிகளும் என்ற பொருட்காட்சி பெய்சிங்கில் நடைபெற்றது. உலகின் பல்வேறு நாடுகளின் சிறந்த தரமுடைய உண்மை மனிதனை போன்ற இயந்திர மனிதன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. சீனாவின் சிஆன் சிற்ப ஆய்வு கழகம் தயாரித்த இயந்திர மனிதன், இந்த கழகத்தின் தலைவர் சௌ ரென் சோவை மாதிரியாக கொண்டு உருவரையப்பட்டது. சௌ ரென் சோவும் இயந்திர மனிதனும் ஒரே இடத்தில் அமர்ந்த போது, பக்கத்தில் இருப்பவர்கள் எது உண்மையான மனிதன் எது இயந்திர மனிதன் என்பதை வித்தியாசப்படுத்த முடியாது.

இந்த இயந்திர மனிதன் கண்ணிமைக்கவும் தலை அசைக்கவும், புண்ணகை செய்யவும் தெரியும். இந்த இயந்திர மனிதனை தயாரிக்கும் போது silica gel மூலப் பொருள், மனிதனின் தலைமயிர் ஆகியவை பயன்படுத்தப்பட்டதால் இது உண்மை மனிதனை போல ஒரே மாதிரியாக இருக்கின்றது என்று இந்த கழகத்தின் தலைவரும் பேராசிரியருமான சௌ ரென் சோ விளக்கிக் கூறினார். உண்மை மனிதனை போன்ற இத்தகைய இயந்திர மனிதன் அருங்காட்சியகம், பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் வழிகாட்டியாக பயன்படுத்தப்படலாம். வரலாற்றிலான சில காட்சிகளை காட்டவும் பயன்படுத்தப்படலாம் என்று அறிமுகப்படுத்தப்பட்டது.

அமெரிக்காவின் டிஸ்னி பூங்காவில் அமெரிக்க அரசு தலைவர் லின்கன் சுதந்திர பிரகடனத்தை வாசித்த காட்சி இத்தகைய இயந்திர மனிதன் மூலம் காட்டப்பட்டது. இப்பொழுது சீனத் தேசிய அருங்காட்சியத்தின் Wax Works museum, சிஆன் chaoren sculpture கழகத்துடன் தொடர்பு கொண்டு, உண்மை மனிதனை போன்ற இயந்திர மன்தன்களால், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட கொண்டாட்ட காட்சியை மீண்டும் காண்பிக்கத் திட்டமிட்டுள்ளது. அன்றைய பொருட்காட்சியில், மனிதனுக்கு பதலாக, இயந்திர மனிதன் வெடிக்க உள்ள குண்டுகளை அகற்றும் காட்சியும், பாம்பு வடிவத்தில் தயாரிக்கப்பட்ட இயந்திர மனிதன் மிகவும் சிறிய இடத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்ட காட்சியும் காணப்பட்டன.

அளவில் சிறிய, விரைவாக செயல்படக் கூடிய இயந்திர மனிதன் தரையை சுத்தம் செய்வதன் மூலம், வீட்டு வேலைகளில் சி்க்கிக்கொள்ளும் நிலை தீர்க்கப்படுவதில் மக்கள் நம்பிக்கை ஆர்வம் கொண்டுள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளில் இயந்திர மனிதன்கள் மருத்துவத் துறையில் பரவலாக பயன்படுத்தப்படும். அடுத்த 15 ஆண்டுகளில் இயந்திர மனிதன்கள் வீட்டு சேவகர்களாக மாறும் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.