அடுத்த ஆண்டு சீனா, முதலீட்டு அதிகரிப்பை நியாகமாக கட்டுப்படுத்தி, முதலீட்டு கட்டமைப்பைச் சீர்திருத்தி, முதலீட்டு பயனை உயர்த்தும் என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டி இயக்குநர் மாகேய் தெரிவித்தார்.
அண்மையில் பெய்ஜிங்கில் பேசிய அவர், நிலம், சுற்று சூழல் பாதுகாப்பு, எரியாற்றலைச் சிக்கனமாகப் பயன்படுத்தல் ஆகியவற்றில் கட்டிடத் திட்டப்பணிகள் அனுமதிக்கப்படும் வரையறையை, அடுத்த ஆண்டு சீனா உயர்த்தி, கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும் என்றும், கிராம உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிபந்தனை, அடிப்படை கல்வி, பொது சுகாதாரம், மேற்கு பகுதி வளர்ச்சி முதலிய துறைகளில் முதலீட்டை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.
|