• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-27 19:40:32    
நேயர்களின் கருத்துக்கள்

cri
க்ளீட்டஸ்: அக்டோபர் 10ம் நாள் ஒலிபரப்பான சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி ஈரோடு வெங்கம்பூர் வி.பி. நல்லசிவம், வி.பி.குமார் ஆகியோர் எழுதிய கடிதம். சீன மக்களின் பேச்சோடு பேச்சாக கலந்திருக்கும் ஆடு, கோழி, பன்றி ஆகியவை பற்றிய பழமொழிகளை ராஜாராம் அவர்கள் கூறியதைக் கேட்டு ரசித்தோம். ஆட்டைத் தொலைப்பானேன், தேடித் தேடி திரிவானேஎன் என்ற ஆடு பற்றிய பழமொழியும், ஈ அடிக்க சுத்தியல் எதுக்கு, செத்த பன்றி போல் தூங்குகிறான் பார் என்ற பழமொழியும் கேட்டோம். மனம் மகிழ நிகழ்ச்சியை வழங்கிய ராஜாராம் அவர்களுக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.

வாணி: அடுத்து மோகன் நகர் நேயர் ஏ. வேலு எழுதிய கடிதம். அக்டோபர் 13 நாள் ஒலிபரப்பில் செய்தி அறிக்கை, செய்தித் தொகுப்பில் முதியோருக்கான சமூகக் காப்புறுதி பற்றிய கட்டுரை, உங்கள் குரல் நிகழ்ச்சியில் திருச்சி அண்ணா நகர் நேயர் மன்றத்தினர் தயாரித்து வழங்கிய நிகழ்ச்சி ஆகியவற்றைக் கேட்டோம் என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து நீலகிரி கீழ்குந்தா நேயர் கே. கே. போஜன் எழுதிய அக்டோபர் 15ம் நாள் இடம்பெற்ற செய்தித்தொகுப்பு பற்றிய கடிதம். சீன அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாட்டையும், தொழிற்சங்கங்களையும் எப்படி ஊக்குவிக்கிறது என்பதைப் பற்றித் தெளிவாக கூறியதைக் கேட்டு அறிந்துகொண்டோம். ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகள் பெற்ற 60 வயது முதியவர்களுக்கு 600 யுவான் பரிசுத்தொகையை அரசு தருகிறது என்று அறிந்துகொண்டோம். இதனால் பல லட்சம் குடும்பங்கள் பயன் பெறும். மேலும் தொழிற்சங்கங்களைப் பற்றி கூறியதையும் கேட்டோம்.

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு

என்ற குறலில், ஊற்று நீரும், மழை நீரும் ஆகிய இருவகை நீர்வளமும், தக்க ஊறுவளமாய் அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து வழியும் ஆற்று நீர் வளமும், வலிய அரணும் நாட்டிற்கு நல்ல உறுப்புகளாகும் என்று கூறப்பட்டுள்ளது. மனிதனுக்கு கண் எவ்வளவு முக்கியமோ அதுபோல தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் முக்கியம். உலகில் மிகப்ப்பெரிய நாடான சீனாவில் 20 கோடி தொழிலாளர்கள் தொழிற்சங்கஙங்களில் இருக்கின்றனர். மேலும் இத்தொழிற்சங்கங்கள் வளர வாழ்த்துகிறோம். 60 வயதைத் தாண்டிய 1 அல்லது 2 குழந்தை உள்ளவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குவதால் 80 லட்சம் வியாபாரிகள் அதிகரித்துள்ளனர், நாட்டிலுள்ளவர்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று எழுதியுள்ளார்.