சிங்ஹாய்-திபெத் ரயில் பாதையும், லின்ச்சி விமான நிலையமும் திறந்து வைக்கப்பட்ட பின், திபெத்தின் சுற்றுலாத் துறை வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது.
இவ்வாண்டில், சுற்றுலா பயணம் மேற்கொள்ள திபெத் தன்னாட்சி பிரதேசத்திற்கு வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 24 லட்சத்து 50 ஆயிரமாகும். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 36 விழுக்காடு அதிகரித்துள்ளது. தற்போது, திபெத்தில் 600க்கு கூடுதலான ஹோட்டல்கள் உள்ளன. சுற்றுலாத் துறையில் நேரடியாக ஈடுபடும் பணியாளர்களின் எண்ணிக்கை, 20 ஆயிரமாகும்
|