புதிய ரகக் கிராம ஒத்துழைப்பு மருத்துவம்
cri
 கடந்த செப்டம்பர் திங்கள் வரை, சீனாவில் புதிய ரகக் கிராம ஒத்துழைப்பு மருத்துவ முறைமையில் சேர்ந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை, 40 கோடியைத் தாண்டியுள்ளது. நாடு முழுவதிலும் வேளாண் துறையில் ஈடுபடும் மக்கள் தொகையில், இது 45 விழுக்காட்டுக்கு மேலாக உள்ளது. தென் சீனாவின் Hai Kou நகரில் நடைபெற்றத் தேசிய நிதி மற்றும் சமூக உத்தரவாதப் பணிக்கூட்டத்தில், சீன நிதி அமைச்சின் சமூக உத்தரவாதப் பிரிவின் பொறுப்பாளர் பேசுகையில், தற்போது, பெய்சிங், ஷாங்காய், Jiang Su, Zhe Jiang, Guang Dong, Qing Hai, Hai Nan ஆகியவற்றின் அனைத்து மாவட்டங்களிலும் புதிய ரகக் கிராம ஒத்துழைப்பு மருத்துவ முறைமை நிறுவப்பட்டுள்ளது. இவ்வாண்டு, மத்திய நிதித் துறை இதற்கு வழங்கும் உதவித் தொகை, 420 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டின் உதவித் தொகையை விட இது சுமார் 8 மடங்காகும் என்றார். இவ்வாண்டின் ஜனவரி திங்கள் முதல் செப்டம்பர் திங்கள் வரை, புதிய ரகக் கிராம ஒத்துழைப்பு மருத்துவ நிதியினால், 14 கோடி மக்கள் நலன் பெற்றுள்ளனர்.
|
|