• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-28 10:07:59    
திபெத்தில், விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கான திட்டப்பணி

cri
2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமான விவசாயிகளும், ஆயர்களும் புதிய வீட்டில் குடியமர்த்தப்படுவதற்கு, சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்து அரசு இவ்வாண்டு சுமார் 290 கோடி யுவான் முதலீடு செய்தது.
இவ்வாண்டின் துவக்கத்தில், நாடோடி ஆயர்களின் குடியிருப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான பணி, விவசாயிகளின் வீடுகள் சீரமைத்தல் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்ட விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை வழங்கும் திட்டப்பணி, திபெத்தில் துவங்கியது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள், 80 விழுக்காட்டு விவசாயிகள் மற்றும் ஆயர்கள் அடங்கும் சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான, வசதியான வீடுகளில் குடியமரச்செய்து, அவர்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை வசதியை மேம்படுத்தி, விவசாயிகள் மற்றும் ஆயர்கள் வாழும் பிரதேசத்தின் தற்போதைய பின்தங்கிய நிலையை அடிப்படையில் தீர்த்து, நீர், மின்சாரம், வானொலி வசதி இருக்க பாடுபட இத்திட்டம் திட்டமிட்டுள்ளது.