திபெத்தில் நபர்வாரி மொத்த உள் நாட்டு உற்பத்தி
cri
இவ்வாண்டு சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில், நபர்வாரி மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு, 10 ஆயிரம் யுவானை முதன்முறையாகத் தாண்டியுள்ளது. திபெத் பொருளாதாரம், பாய்ந்து முன்னேறும் பாங்கில் வளர்ச்சியடைந்துள்ளதை இது கோடிட்டுக்காட்டுகின்றது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பொருளாதாரப் பணிக்கூட்டத்திலிருந்து எமது செய்தியாளர் இதை அறிவித்தார். இவ்வாண்டு, முழுப் பிரதேசத்திலும், மொத்த உள் நாட்டு உற்பத்தி, 2900 கோடி யுவானை எட்டக்கூடும். நபர்வாரி மொத்த உள் நாட்டு உற்பத்தி, 10 ஆயிரத்தை தாண்டக்கூடும். கடந்த சில ஆண்டுகளாக, தொழில் கட்டமைப்பை திபெத் சரிப்படுத்தி, அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சிறப்பு மிக்க வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புத் தொழில் திட்டப்பணிகளுக்கு ஆதரவளித்து, தொழில் நுட்ப வழிகாட்டி, விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கு பயிற்சி அளித்து, உழைப்பாற்றலை ஏற்றுமதிச் செய்தது. இதற்கிடையில், சிங்காய்-திபெத் ரயில் பாதை திறந்து விடப்பட்டதன் மூலம், வெளிநாட்டுத் திறப்பு அளவை வலுப்படுத்தி, திபெத் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியைத் தூண்டி, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானத்தை உயர்த்தியுள்ளது.
|
|