• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-29 20:22:36    
சீன விளையாட்டுத்துறையில் சிறப்பு நிகழ்வுகள்

cri

சீன விளையாட்டுத்துறையில் 2006ம் ஆண்டின் சிறப்பு அல்லது முக்கிய நிகழ்வுகள்

• நீண்ட காலமாக ஒலிம்பிக்கில் ச்கீயிங் எனும் பனிச்சறுக்கு விளையாட்டில் தங்கம் பெறாமல் இருந்த நிலை, பிப்ரவரி 23ம் நாள் நீங்கியது. சீனாவின் ஹான் சியவ்பங் ஆடவர் பனிச்சறுக்கு ஏரியல் பிரிவில் தங்கம் பெற்றார். சீனாவின் முதல் குளிர்கால ஒலிம்பிக்கின் தங்கம் வென்றவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. டூரினில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸில் இந்த தங்கத்தை அவர் வென்றார். பெண்கள் பிரிவில் 500 ம் குறுகிய தூர பனிச்சறுக்கு போட்டியில் சீன வீராங்கனை வாங் மங்க் தங்கம் வென்றார். சங் டான், சாங் ஹஒ இணை பனிசறுக்கு நடனத்தில் வெள்ளி பதக்கம் வென்றது. இறுதிச்சுற்றில் கீழே விழுந்து, வலியேற்பட்ட நிலையிலும் துடிப்புடன் எழுந்து ழாங் டான் மீண்டும் தொடர்ந்து சீனாவுக்கு பதக்கம் பெற்றுக்கொடுத்தார்.

• அக்டோபர் 18ம் நாள் டென்மார்க் நாட்டின் ஆர்ஹுஸ் நகரில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன் போட்டிகளில் முதன் முறையாக சீனாவின் பெண்கள் அணி, குழு ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவை வென்று உலக சாம்பியன் பட்டம் பெற்றது. சாங் நான், சங் ஃபெய், பங் பான்பான், சுவோ சுவோரு, ஹ நிங் ஆகியோர் அடங்கிய குழு இந்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

• சீன கோ சதுரங்க விளையாட்டில் மூன்று உலக பட்டங்களை சீன சதுரங்க வீரர்கள் பெற்றனர். ஜனவரி 13ம் நாள் சாம்சங் கோப்பையை லுவோ சியான் ஹவும், ஏப்ரல் 12ம் நாள் எல்ஜி கோப்பையை கு லியும், செப்டம்பர் 28ம் நாள் சுன்லான் கோப்பையை நான்கு சீனர்களும் வென்றனர். மூன்று கோப்பைகளுமே உலக அளவில் நடைபெற்ற கோ சதுரங்க சாம்பியன் பட்ட போட்டிகளாகும்.

• 13 ஆண்டுகால உலக சாதனையை 110 மீட்டர் தடையோட்டத்தில் முறியடித்தார் சீனாவின் பறக்கும் மனிதன் என்றழைக்கப்படும் லியு சியாங். பிரிட்டன் நாட்டு காலின் ஜாக்சன் படைத்த சாதனையை ஜூலை 11ம் நாள் லாவ்சேனில் நடைபெற்ற சர்வதேச தடகள விளையாட்டு சம்மேளனத்தின் போட்டியில் 12.88 வினாடிகளில் 110 மீட்டர் ஓடி முறியடித்து, புதிய உலக சாதனை படைத்தார்.