• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-09 08:38:24    
நாயும் நன்றியும்

cri
நன்றியுள்ளது நாய். ஜெமான விசுவாசத்திற்கு அது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. என்ன வேலை சொன்னாலும் தட்டாமல் செய்யும். சுருக்கமாகச் சொன்னால், மனிதனுக்கு நன்றியுள்ள நாலுகால் நண்பன். அதனால் தான் சீனாவில் நாய்க்கு ரொம்பவும் செல்லம் கொடுக்கிறார்கள். பெண்கள், கஷ்டப்பட்டு 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த குழந்தையைக் கூட பெராம்புலேட்டலில் வைத்துத் தள்ளிக் கொண்டு போகிறார்கள். ஆனால் பிரியமான நாய்க்குட்டியை நடக்க விடுவதில்லை. பிரியத்தோடு தோளில் தூக்கி வைத்துக் கொஞ்சுகிறார்கள். பட்டுத்துணியில் சட்டை தைத்துப் போட்டு, தலைவாரி ரிப்பன் கட்டி, குஞ்சலம் வைத்து, அழகுபார்க்கிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் சீனாவில் நாயை ஒதுக்கி வைத்திருந்தார்கள். பக்கத்தில் அண்ட விடுவதில்லை. அது ஒரு மோசமான மிருகமாகக் கருதப்பட்டதற்குப் பல சீனப் பழமொழிகள் உள்ளன. நன்றி கெட்ட இதயம் உடையது நாய் என்கிறார்கள். எதனால்? Lang Xin Gou Fei-ஓநாயின் இதயமும் நாயின் நுரையீரலும் சேர்ந்த வடிவமாம். நாய் வாயைத் திறந்தால் குரைக்கத்தான் செய்யுமாம். அதன் வாயில் இருந்து சந்தன வாடையா வீசும்? Gou Zui Li Tu Bu Chu Xiang Ya-நாய் வாயைத் திறந்து நல்லது பேசாதாம். குரைப்பதைத்தவிர அதற்கு வேறொன்றும் தெரியாதாம். நாய் தற்பெருமை உடையதாம். Gou Yan Kan Ren Di, மனிதர்களை நாய் இளப்பமாகப் பார்க்குமாம். நாய்க்கு வந்த வாழ்வைப் பார்த்தீர்களா? நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அடுத்த வீட்டுக்காரி சோ தோ என்றால் அது வாலைக் குழைத்தபடி அங்கே ஓடும் அல்லவா? இதனால் தான் நாயின் வால் அசிங்கமானது என்கிறது சீனப் பழமொழி. Gou Wei Xu Diao-அழகான நாயின் உடம்பில் அசிங்கமாக வால் தொங்குகிறதாம். அது வாலை ஆட்டும் போது தானே. அதனுடைய அன்பு வெளிப்படும்! நாய் எப்போதுமே அடுத்தவரின் விவகாரத்தில் மூக்கை நுழைக்கக்கூடியதாம்-Gou Na Hao Zi Duo Guan Xian Shi-அதாவது எலியைப் பிடிக்க அது முகர்ந்து பார்த்துக் கொண்டே ஓடுமாம். அதனால் தான் போலீசில் மோப்பநாய் என்று ஒரு படைப் பரிவையே வைத்திருக்கிறார்கள். நாய்க்கு நல்ல சேர்க்கையே கிடையதாம். அதனுடைய கூட்டாளிகள் எல்லோடுமே மோசமானவர்களாம். Hu Peng Gou You-நாயின் நட்பு குள்ளநரியின் கூடவாம். அதனால் தான் மனிதர்களுடன் நட்பு வைத்திருக்கிறதோ! ஏனென்றால் மனிதர்களாகிய நாம் மட்டும் லேசுப் பட்டவர்களா என்ன? கூட இருந்தே இழிபறிப்பதில் நம்மில் எத்தனையோ பேர் வல்லவர்களாக இருக்கிறோமே! நம்பிக்கைத் துரோகம் செய்வதிலும் நாய் மனிதர்களுக்குச் சளைத்ததல்ல. இரை போடுகிறவரின் கையை அது கடித்து விடுமாம். Gou Yao Lu Dong Bin-ஏனென்றால், நல்லவர்களை நாயினால் அடையாளம் காண முடியாது என்கிறார்கள். சீனப் புராணத்தில் Lu Dong Bin என்ற ஒருவர் இருந்தார். சாகாவரம் பெற்ற எட்டுச் சீனர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவரையே அவருடைய நாய் கடித்து விட்டதாம்.

சரி, எல்லா நாய்களையும் மோசம் என்று சகட்டுமேணிக்கு முத்திரை குத்திவிடுவதா? நாய்களிலும் சில மகாத்மாக்கள் இருக்கத்தானே செய்யும்! Quan Ma Zhi Lao-அயராது உழைப்பவனை நாயை போலசும், குதிரையைப் போலவும் வேலை செய்கிறவன் என்கிறார்கள் சீனர்கள். பந்தை நீண்ட தூரத்துக்கு லிட்டெறிந்தால், ஓடிப்போய் அதைக் கவ்விக்கொண்டு வந்து நம் காலடியில் வைத்துவிட்டு, வாலை ஆட்டியபடியே நம்மை நிமிர்ந்து பார்க்கும். இன்னும் என்ன செய்யணும்? என்பது போல. பந்து விளையாட்டு பயனற்றது என்பது நாய்க்குத் தெரியும். ஆனாலும் அது சேவாரத்தினம் அல்லவா?