• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-04 08:47:40    
ஹாங்சோவில் சுற்றுலா

cri

தொன்மையான 7 சீன நகரங்களில் ஹாங்சோ ஒன்றாகும். அதற்கு, மிகுந்த பண்பாட்டுப் பின்னணி உண்டு. உலகப் புகழ்பெற்ற சுற்றுலாக் காட்சி நகர் அது. அங்குள்ள சிஹு ஏரி மையக் காட்சிப் பிரதேசத்தில் மட்டும், 100க்கும் அதிகமான புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

மனிதர் வசிப்பதற்கு ஏற்ற இடங்களில் ஒன்று ஹாங்சோ. தலை சிறந்த குடியிருப்புப் பிரதேசப் பரிசை அதற்கு ஐ. நா வழங்கியது. சர்வதேசப் பூங்கா நகரமெனவும் அது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிஹு ஏரிக் காட்சிப் பிரதேசத்தின் பரப்பளவு 60 சதுர கிலோமீட்டராகும். இங்குள்ள எழில் மிக்க ஏரிக் காட்சியும் தொல் பொருள், வரலாற்றுச் சின்னம் ஆகியவையும் ஒன்றிணைந்து, இயற்கை அழகை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஹாங்சோ நகரில் தனிச்சிறப்பு வாய்ந்த வீதிகள் அதிக அளவில் உள்ளன.

நைன்சென் வீதியானது, பொழுதுபோக்கு வீதியாகும். பான(மது)அகம், தேநீர் அகம், குழம்பி அகம் ஆகியவை இடம்பெற்றுள்ள இவ்வீதி, சீன மற்றும் மேலை நாட்டுப் பண்பாட்டுத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த வீதியாகும். இவ்வீதிக்கு எதிரே, சிஹு ஏரி அமைந்துள்ளது.

இவ்வாண்டு முதல், ஹாங்சோ நகரின் சிஹு ஏரியில் இரவுச் சுற்றுலா நடவடிக்கையின் சில புதிய நிகழ்ச்சிகள் துவங்கின. எடுத்துக்காட்டாக, நீரின் மேல் படகு மூலச் சுற்றுலா, நீரின் மேல் தேநீர் விடுதி முதலிய சுற்றுலா நிகழ்ச்சிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை.

அவை வேறுபட்ட பயணிகளின் விருப்பத்தை நிறைவு செய்ய முடியும். பயணிகளின் அன்றாட பொழுதுபோக்கிற்கு இது மிகவும் பொருத்தமானது. நாள்தோறும் மாலை 6:30 மணிக்கு சிஹு ஏரி பூங்காவின் துறைமுகத்தில் 4 பொழுதுபோக்குப் படகுகள் ஒரே நேரத்தில் அனுப்பப்படும். பயணிகள் படகுகளில் ஏறி சிஹு ஏரியின் இரவுக் காட்சியைக் கண்டுகளிக்கலாம்.

விசாலமான ஏரியில், நிலாவின் பிம்பம் நீரில் தென்பட்டுப் பயணிகளுடன் இருப்பது மகிழ்ச்சி தருகின்றது. சீனாவின் நிங்பு நகரைச் சேர்ந்த பயணி hu yue கூறியதாவது, இது வர வேண்டிய ஒரு இடமாகும். இரவில் சுற்றுலா மேற்கொள்வது வேறுபட்ட உணர்வை ஏற்படுத்தும்.

மெல்லிய காற்று வீச சுற்றுப்புறத்திலுள்ள இயற்கைக் காட்சியைக் கண்டுகளிப்பதில் மிகவும் மகிழ்கின்றேன் என்றார் அவர். பயணிகள் திறந்த வாகனம் மூலம் சிஹு ஏரியைச் சுற்றிப் பார்வையிடலாம்.

இதற்கு 40 நிமிடம் தேவைப்படும். ஓவியம் போன்ற எழில் மிக்க இயற்கைக் காட்சி பயணிகளை ஈர்த்துள்ளது. இளம் தென்றல் வீச தொலைவில் மின்னும் விளக்கு ஒளியும் கோபுரத்தின் நிழலும் அவ்வப்போது தென்படும்.

இதனால், நகரிலிருந்து இயற்கைச் சூழலுக்குத் திரும்பும் உணர்வு பயணிகளுக்கு ஏற்படுவது வழக்கம். தவிர, கிழக்கு சீனாவின் ஒருவகை உள்ளூர் நாடகமான yueju நாடக நடிகர்கள், வாகனத்தில் பயணிகளுக்குக் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது,பயணிகளின் மனதில் ஆழப்பதிந்துள்ளது.

இது பற்றி சீனாவின் சாங்ஹை மாநகரைச் சேர்ந்த செல்வி லீலி கூறியதாவது, இந்தச் சிறப்பான கலை நிகழ்ச்சிகள், என் மனதில் ஆழப்பதிந்துள்ளன. அழகான இயற்கைக் காட்சியைக் கண்டுகளிப்பதோடு, உள்ளூர் பிரதேசத்தின் yueju நாடகத்தையும் ரசிக்கலாம். இது மிகவும் நல்லது என்றார்.

சிஹு ஏரி தவிர, ஹாங்சோ நகரில் 2006ஆம் ஆண்டின் 9வது உலக பொழுதுபோக்குப் பொருட்காட்சியகத்தின் முக்கிய இடமான பொழுதுபோக்குப் பொருட்காட்சிப் பூங்கா, பயணிகளை ஈர்க்கும் மற்றொரு காட்சித் தளம் ஆகும். சுமார் 200 ஹெக்டர் பரப்பளவுடைய இப்பூங்காவின் கட்டுமானத்தில் மொத்தம் 350 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டது.

நீல நிறமுடைய ஏரி நீரும் 10 கிலோமீட்டர் நீளமுடைய ஆற்று வழியும் இந்தப் பொழுதுபோக்குப் பொருட்காட்சிப் பூங்காவை நீர் நகரப் பகுதி, கடற்கரைப் பகுதி, ஏரிக்கரைப் பகுதி, பொழுதுபோக்குப் பகுதி ஆகிய 4 பகுதிகளாகப் பிரித்திருக்கின்றன.

அனைத்து பகுதிகளிலும் வேறுபட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. அவை தனிச்சிறப்பு மிக்கவை. கடந்த ஏப்ரல் திங்களில் பொழுதுபோக்குப் பொருட்காட்சிப் பூங்கா துவங்கப்பட்டது முதல் இதுவரை, நாள்தோறும் சுமார் பத்தாயிரம் பயணிகள் வருகை தருகின்றனர்.