Lan Cang ஆறு-Mekong ஆற்றின் வளர்ச்சி, தென் கிழக்காசியாவின் சுற்றுலாத் தொழிலுக்கு பெரும் வணிக வாய்ப்பை வழங்கியுள்ளது. சீனாவின் யுன்னான் மாநிலத்தின் தொடர்புடைய வாரியம் இதை அறிவித்தது. 4880 கிலோமீட்டர் நீளமுடைய Lan Cang ஆறு-Mekong ஆறு, சீனா, மியன்மார், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் ஆகிய 6 நாடுகளுக்கூடாக செல்லும் ஆறாகும். யுன்னான் மாநிலத்தின் கப்பல் விவகார மற்றும் சுற்றுலா வாரியங்களின் தகவலின் படி, Mekong ஆற்றின் மேல்பகுதியின் கப்பல் போக்குவரத்து சீர்படுத்தப்பட்ட பின், கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு உத்தரவாதம் தெள்ளத்தெளிவாக உயர்ந்துள்ளது. சீனாவையும், தென் கிழக்காசியாவையும் இணைக்கும் புதிய சுற்றுலா நெறியைத் திறப்பதற்கு நிலைமையை இது உருவாக்கியுள்ளது. நிலைமை பக்குவமடையும் போது, தாய்லாந்திலிருந்து லாவோஸுக்கு செல்லும் Mekong ஆற்று கப்பல் போக்குவரத்து பாதையை சீனா, லாவோஸ், மியன்மார், தாய்லாந்து ஆகிய நான்கு நாடுகள் கூட்டாக சீர்படுத்தி, இதன் சுற்றுப்புறப்பிரதேசங்களில் உள்ள சுற்றுலா வளத்தை வளர்க்கும். சீனாவின் Xi Shuang Ban Na, தாய்லாந்தின் வடபகுதியில் உள்ள சுற்றுலா மண்டலம், லாவோஸ் மற்றும் கம்போடியாவில் உள்ள காட்சி தளங்கள் ஆகியவை இணைக்கப்படும். தடையற்ற சுற்றுலா பிரதேசம் உருவாக்கப்படும்.
|