சீனாவின் Xi Chang செயற்கைக்கோள் ஏவு மையத்திலுள்ள மூன்றாம் ஏவு தாங்கியை மேம்படுத்தும் பணி நேற்று முடிவடைந்து அதிகாரப்பூர்வமாக பயன்பட்டுள்ளது. இந்த ஏவு மையம், அதிகமான செயற்கைக் கோள்கள் ஏவப்படும் புதிய சுற்று கால கட்டத்தில் நுழையும். தொலைத்தூர கட்டுப்பாடு முதலிய புதிய தொழில் நுட்பத்தின் பயன்பாட்டினால், சீராக்கப்பட்ட ஏவு தாங்கியின் சாதனங்கள், மேலும் முன்னேறியவை. நம்பக்கூடியவை. மேம்படுத்தப்பட்ட இம்மூன்றாம் ஏவு தாங்கி, முன்னாள் இரண்டாம் ஏவு தாங்கி ஆகிய இரண்டும் மாறி மாறி பயன்படுத்தப்படும். இதன் மூலம் இந்த ஏவு மையத்துக்கு, ஆண்டுதோறும் பத்துக்கு மேலான செயற்கைக் கோள்களை ஏவும் திறன் உண்டு என்று செயற்கைக்கோள் ஏவு மையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் கூறினார்.
|