• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-11 18:50:42    
உலகப் புகழ்பெற்ற சுற்றுலாக் காட்சி நகர்—ஹாங்சோ

cri

மனிதர் வசிப்பதற்கு ஏற்ற இடங்களில் ஒன்று ஹாங்சோ. தலை சிறந்த குடியிருப்புப் பிரதேசப் பரிசை அதற்கு ஐ. நா வழங்கியது. சர்வதேசப் பூங்கா நகரமெனவும் அது தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் திங்களில் பொழுதுபோக்குப் பொருட்காட்சிப் பூங்கா துவங்கப்பட்டது முதல் இதுவரை, நாள்தோறும் சுமார் பத்தாயிரம் பயணிகள் வருகை தருகின்றனர்.

வெனிஸ் நீர் நகரப் பகுதி, இப்பூங்காவில் தனிச்சிறப்பு மிக்க காட்சித் தலம் ஆகும். இத்தாலி வெனிஸ் கட்டடமும், வேறுபட்ட பாணியில் கட்டப்பட்ட 10க்கும் மேற்பட்ட சிறிய பாலங்களும் பல கிலோமீட்டர் நீளமுடைய நீர் வழியும் நீர் பகுதியை சிறப்பு வாய்ந்த உலகமாகப் பிரித்துள்ளன.

பயணிகள் படகுகள் மூலம், ஏரியில் சுற்றுலா மேற்கொண்டு வெனிஸ் நகருக்குரிய ரம்மியமான அழகை உணரலாம். வெனிஸ் நீர் பகுதியில் கட்டியமைக்கப்பட்ட 100 நகரக் காட்சியகங்கள் 2006ஆம் ஆண்டின் பொழுதுபோக்குப் பொருட்காட்சியகத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.

100 சர்வதேச பிரபல நகரங்கள் மற்றும் தனிச்சிறப்புடைய பொழுதுபோக்குச் சுற்றுலா நகரங்களின் காட்சியகங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. ஏறக்குறைய நாள்தோறும் நடைபெறும் நடவடிக்கைகளினால் தத்தமது நாட்டுப் பாணியுடன் கூடிய பாடல்களும் நடனங்களும் கலை நிகழ்ச்சிகளும் சுவையான உணவு வகைகளும் பயணிகளுக்கு வழங்கப்படும்.

இரவில், இப்பூங்காவில் எங்கெங்கும் இருக்கும் காஃபியகங்களிலும் தேநீர் விடுதிகளிலும் ஒளிவீசும் மெல்லிய விளக்கு ஒளி, இரவின் ரம்மியமான அழகை அதிகரித்துள்ளது. பொழுதுபோக்குப் பொருட்காட்சிப் பூங்கா, கூச்சலிடும் சத்தம் கேட்கும் ஆனந்தம் ததும்பும் இடம் ஆகும்.

ஏனெனில் உலகில் நடமாட வல்ல, அளவில் மிகப் பெரிய சுற்றுலாச் சின்னமாகத் திகழும் சர்வதேச கேளிக்கை விழா இங்கு நடைபெறுகின்றது. 6 திங்கள் நீடித்திருக்கும் இந்த சர்வதேச கேளிக்கை விழாவில் பயன்படுத்தப்படும் பொழுதுபோக்குச் சாதனங்களில் 80 விழுக்காடு, சீனாவில் முதல் தடவையாகப் பயணிகளுக்குச் சேவை புரிகின்றது. ஆசியாவில் மிகவும் உயரமான ராட்சத சக்கரம் இங்கு உள்ளது.

இரவில் 108 மீட்டர் உயரமுடடைய ராட்சத சக்கரத்தில் மின்னும் விளக்கு ஒளி அழகாக காட்சியளிக்கின்றது. சீனாவின் ஹுசோ நகரைச் சேர்ந்த பயணி லின்மெய்பங் கூறியதாவது,  நான் ஹுசோ நகரைச் சேர்ந்தவர். நாங்கள் சுயமாக ஒரு குழுவை உருவாக்கிச் சுற்றுலாப் பணியகத்தின் வாகனம் மூலம் இங்கு வந்துசேர்ந்தோம். 18 பேரைக் கொண்ட குழுவுறுப்பினர்கள் அனைவரும் உற்றார் உறவினர்களும் நண்பர்களும் ஆவர் என்றார் அவர்.

பயணிகளுக்குக் களைப்பாக இருக்கும் போது, பொழுதுபோக்குப் பொருட்காட்சிப் பூங்காவிலுள்ள தேநீர் விடுதியில் அமர்ந்து உண்மையான லுங்சிங் தேநீரைக் குடிப்பது மகிழ்ச்சி தரும் விஷயம் ஆகும். லுங்சிங், மெய்சியாவு உள்ளிட்ட விவசாயிக் குடும்பத் தேநீர் விடுதிகள், பயணிகள் அடிக்கடி செல்லும் இடம் ஆகும்.

இவ்விடுதிகளில் லுங்சிங் தேநீர், விவசாயக் குடும்பக் கறி வகை ஆகியவற்றைச் சுவைத்து அருந்தி, ஹாங்சோ விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கைப் பழக்க வழக்கங்களையும் மகிழ்ச்சியையும் இயற்கைச் சூழ்நிலையையும் நேரடியாக உணரலாம். சிங்கப்பூர் நாட்டவர் செல்வி ஹகுவெய்சன் ஹாங்சோ தேநீர் விடுதிச் சூழ்நிலை மீது பெரும் ஆர்வம் கொண்டுள்ளார்.

இங்கு தேநீர் குடிப்பது தவிர, பண்பாட்டுச் சூழ்நிலையையும் உணரலாம் என்றார் அவர். அவர் மேலும் கூறியதாவது, ஹாங்சோ தேயிலை, பட்டுத் துணி போல தரமுடையது. அது நீண்ட வரலாறுடையது. தேநீர் பண்பாடு, ஹாங்சோ நகரின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். தேநீர் பண்பாட்டுக் கிராமம், தேநீர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் முக்கிய இடம் ஆகும்.

நாங்கள் இங்கு தேநீர் குடிப்பதன் மூலம், பாரம்பரிய ஹாங்சோ எவ்வாறு இருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ளலாம் என்றார் அவர். இரவில் சிஹு ஏரியில் சுற்றுலா மேற்கொள்வதற்குப் பல வழி முறைகள் உண்டு. சுற்றுலாப் படகு மூலம் சிஹு ஏரியில் சுற்றுலா மேற்கொள்வதற்கு சுமார் 50 நிமிடம் தேவைப்படும். சீட்டு விலை 25 யுவான்.

வாகனம் மூலம் சுற்றுலா மேற்கொள்வோருக்குத் தலா 5 யுவான். பொழுதுபோக்கு பொருட்காட்சிப் பூங்காவிலுள்ள global carnivalவுக்கான நுழைவுச் சீட்டு விலை, ஒருவருக்கு 30 யுவான். ஹாங்சோ விவசாயி குடும்பத் தேநீர் விடுதியில் தேநீர் குடிப்பதும் உணவு உண்பதும் உட்பட சராசரி ஒருவரின் செலவு, சமார் 50 யுவான்.