• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-17 14:57:58    
பட்டுப் பாதை

cri

பட்டுப் பாதை, கிழக்கில் ஷெங்சி மாநிலத்தில் பழம் பெருமை வாய்ந்த சிஆனிலிருந்து தொடங்கி, வழியில் சீனாவின் ஷெங்சி, கான்சு, நின்சியா, சிங்ஹைய் ஆகிய மாநிலங்கள் மற்றும் சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்துக்கும் தற்போதைய சுதந்திர நாடுகள் கூட்டு அமைப்பு, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா ஆகியவற்றுக்கும் ஊடாகச் சென்று, மத்திய தரைக் கடலின் கிழக்கு கரையோரம் அடைந்தது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட பட்டுத்துணி, அங்கிருந்து ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டது. சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உருமுச்சி நகரம், பட்டுப் பாதையில் சுற்றுலா மேற்கொள்வதற்கு இன்றையமையாத இடம். தெரு சந்தை, சிங்ஜியாங்கில் பாசா என்று அழைக்கப்படுகின்றது.

தெரு சந்தை நடைபெறும் போதெல்லாம் அங்குள்ள ஆண்களும் பெண்களும் முதியோரும் குழந்தைகளும் தலை சிறந்த ஆடைகளையும் அழகான நகையையும் அணிவர்.

முஸ்லிம் பெண்மணிகள் முகம் மூடும் லேசான பட்டுத் தணியை அணிவர். பயணிகள் பாசாவில் தாம் விரும்பியவாறு நடந்துசெல்லலாம். உணவுப்பொருள் சந்தையில் உய்கூர் இன மக்களின் தனிச்சிறப்பு வாய்ந்த சிற்றுண்டியை உண்ணலாம். கண்களைக் கவரும் பட்டுத் துணிகள் அதிக அளவில் உள்ளன