ஒட்டுமொத்த கட்டுப்பாட்டினால், இவ்வாண்டு சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு விகிதம் தணிவடைந்து வருகின்றது என்று சீனச் சமூக அறிவியல் கழகம் அண்மையில் வெளியிட்ட 2007ஆம் ஆண்டுக்கான பொருளாதார நீல அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. இவ்வாண்டு, சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழலில், திடீரென கடும் நிகழ்ச்சி ஏற்படாமல், உள்நாட்டில் அளவில் பெரிய கடும் இயற்கை சீற்றம் மற்றும் இதர முக்கிய பிரச்சினைகள் நிகழவில்லை என்றால், சீனாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியின் அதிகரிப்பு விகிதம் குறையும் என்றும் 10 விழுக்காடு என்ற நிலையில் இருக்கக்கூடும் என்றும் நீல அறிக்கை எதிர்பார்க்கின்றது.
|