• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-03 16:55:39    
அரசு சார் வணிக வங்கிகளின் பங்குதாரர் முறை சீர்திருத்தம்

cri

தேசியப் பொருளாதாரம் சீராகவும் வேகமாகவும் வளர்வதற்கு மேலும் கூடுதலான பங்கினை ஆற்றும் பொருட்டு, அரசு சார் வணிக வங்கிகளின் பங்குதாரர் முறை சீர்திருத்தத்தை சீனா தொடர்ந்து ஆழமாக்கும் என்று சீன மத்திய வங்கியான சீன மக்கள் வங்கித் தலைவர் Zhou Xiao Chuan அண்மையில் கூறினார்.
தற்போது, சீன வங்கி, சீனக் கட்டுமான வங்கி, சீன தொழில் மற்றும் வணிக வங்கியின் பங்குதாரர் முறை சீர்திருத்தம் தெளிவான பயன் பெற்றுள்ளது என்றும், அரசு சார் வணிக வங்கிகளின் பங்குதாரர் முறை சீர்திருத்தம், நீண்டகாலமானது. சிக்கலானது. கடினமானது என்றும் அவர் கூறினார். அடுத்த கால கட்டத்தில், இம்மூன்று வங்கிகள் உட்புறச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து ஆழமாக்கி, அலுவல் அமைப்பு முறையை விரைவாக மாற்ற வேண்டும் என்றும், உட்புறக் கட்டுப்பாடு மற்றும் அபாயத் தடுப்பு அமைப்பு முறையை வலுப்படுத்தி, வாராச் சொத்துகள் மீண்டும் அதிகரிப்பதையும், அலுவல் பயன் குறைவதையும் கண்டிப்பாகத் தடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாணயத் தொழில் நிறுவனங்களின் சீர்திருத்ததை மேலும் செவ்வனே பன்முகங்களிலும் ஆழமாக்கும் பொருட்டு, சீர்திருத்தத்துக்கு இசைவான நடவடிக்கைகளை வேகமாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.