வேளாண் பொருள் பதனீட்டுத் தொழில்
cri
2010ஆம் ஆண்டுக்குள், வேளாண் பொருள் பதனீட்டுத் தொழில் மதிப்பு, 7 லட்சம் கோடி யுவானைத் தாண்டுவது என்ற வளர்ச்சிக் குறிக்கோளை நனவாக்க சீனா பாடுபடும் என்று சீன வேளாண் அமைச்சகம் அண்மையில் முன்வைத்தது. 2005ஆம் ஆண்டு, சீனாவில் ஆண்டு விற்பனைத் தொகை, 50 லட்சம் யுவானுக்கு அதிகமாகக் கொண்ட வேளாண் பொருள் பதனீட்டுத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிறுவனங்களின் தொழில் மதிப்பு, 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது. வேளாண் பொருள் பதனீட்டுத் தொழில், சீனத் தேசிய பொருளாதார வளர்ச்சியில், மிக வேகவாக வளர்ந்து வரும் முதுகெலும்புத் துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
|
|