அடுத்த சில ஆண்டுகளில், நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் சர்வதேசப் போட்டியில் பங்கெடுப்பதற்கு ஆதரவளிக்க, சீனா பல்வகை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டியின் துணைத் தலைவர் Ou Xin Qian கூறியுள்ளார். அடுத்த சில ஆண்டுகளில், நடுத்தர மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தமது பொருளாதார அதிகரிப்பு வழிமுறையை மாற்றுவதற்கு அரசு வழிகாட்டி, பதனீட்டுத் தொழில் வர்த்தகத்தின் மேம்பாட்டை விரைவுபடுத்தும் என்று அவர் விவரித்தார். இதற்கிடையில், வரி வசூலிப்புச் சலுகை கொள்கை மூலம் இத்தொழில் நிறுவனங்கள் சர்வதேச வர்த்தகத்தில் பங்கெடுத்து, நிதி அமைச்சகம் நிறுவிய அந்நிய வர்த்தக வளர்ச்சி நிதியத்திலிருந்து உதவித்தொகையை அவை பெறுவதற்கு ஊக்கமளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
|