சீன அரசின் திட்டப்படி, 2010ஆம் ஆண்டு வரை, சீனாவில் வட்டம் மற்றும் பட்டிணத் தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு, சுமார் 798 ஆயிரம் கோடி யுவானை எட்டக்கூடும். இத்தொழில் நிறுவனங்களின் பணியாளர்கள் எண்ணிக்கை 15 கோடியைத் தாண்டக்கூடும். இன்று சீன வேளாண் அமைச்சகத்திலிருந்து எமது செய்தியாளர் இதை அறிவித்தார். திட்டப்படி, அடுத்த சில ஆண்டுகளில், வட்டம் மற்றும் பட்டிணத் தொழில் நிறுவனங்களின் வேளாண் பொருள் பதனீட்டுத் தொழிலை சீனா ஆதரித்து, வேளாண் பொருள் பதனீடு மற்றும் புத்தாக்க ஆற்றலை உயர்த்தும். இத்தொழில் நிறுவனங்கள், சர்வதேசச் சந்தையில் நுழைந்து, நாடு கடந்த அலுவலை நடத்துவதற்கு ஊக்கமளிக்கும். இத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த, சீன அரசு நடவடிக்கை மேற்கொண்டு, இத்தொழில் நிறுவனங்களின் உரிமை மற்றும் நலனைப் பேணிக்காத்து, அவற்றின் சுமையைக் குறைத்து, வட்டம் மற்றும் பட்டிணத் தொழில் நிறுவனங்களின் சமூக காப்பீட்டு அமைப்பு முறையை உருவாக்கும்.
|