2006ம் ஆண்டு, வடக்கு சீனாவின் உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில், வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதேசங்களுக்கான நெடுஞ்சாலை நிர்மானத்துக்கு பெருமளவு முதலீடு அதிகரிக்கப்பட்டதன் விளைவாக கிராமப்புறங்களில் புதிதாக 8000 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலைகள் கட்டியமைக்கப்பட்டன. இதனால், ஒதுக்குப்புற வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்புப் பிரதேசங்களில் போக்குவரத்து நிலைமை பெரிதும் மேம்பட்டுள்ளது. எல்லைப்புறத்திலுள்ள சிறுபான்மை தேசிய இனப் பிரதேசமான விசாலமான உள்மங்கோலியாவில் மக்கள் தொகை குறைவு. இப்பிரதேசத்தின் திட்டத்துக்கிணங்க 2006 முதல் 2010 வரையில், உள்மங்கோலியாவில் 45727 கிலோமீட்டர் நீளமுடைய நெடுஞ்சாலைகள் புதிதாகக் கட்டப்படும், அல்லது விரிவாக்கப்படும். 2010ம் ஆண்டிற்குள் 50 விழுக்காட்டு நிர்வாகக் கிராமங்களில் பைஞ்சுதை வழிகள் அல்லது தார்வழிகள் போக்குவரத்துக்குத் திறந்து விட முயற்சி மேற்கொள்ளப்படும்.
|