இயந்திர மின் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதி
cri
சீன வணிக அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, கடந்த ஆண்டு, சீனாவின் இயந்திர மின் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியும் இறக்குமதியும் சீராக அதிகரித்துள்ளன. முதல் 11 திங்களின் ஏற்றுமதி இறக்குமதித் தொகை, 88 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. வணிக அமைச்சகத்தின் புள்ளி விபரங்களின் படி, கடந்த ஆண்டின் ஜனவரி திங்கள் முதல் நவம்பர் திங்கள் வரை, சீனாவின் இயந்திர மின் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதித்தொகை சுமார் 30 விழுக்காடு அதிகரித்தது. இறக்குமதித்தொகை, 23 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தது. சீன நாட்டின், உயர் தரமுடைய கார்கள், பளுதூக்கி இயந்திரம், திட்டப்பணிக்கு பயன்படும் இயந்திரங்கள் ஆகியவற்றுக்கான பெரும் தேவை, சீனாவின் இயந்திர மின் உற்பத்தி பொருட்களின் விரைவான அதிகரிப்பைத் தூண்டியுள்ளது. இதற்கிடையில், சீனாவில் தயாராகும் கார்கள் மற்றும் உதிரி பக்கங்களின் ஏற்றுமதி அசுரவேகத்தில் அதிகரித்துள்ளது.
|
|