• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-04 16:04:25    
சீன-இந்திய நட்புறவு ஆண்டு

cri

எழுதியவர் இலங்கை காத்தாண்குடி எம்.என்.எம் பாஃரிஸ்

சீன வானொலி சீன மக்களை உலக மக்களுக்கும் உலக மக்களை சீன மக்களுக்கும் அறிமுகப்படுத்தி சர்வதேச சமூக மக்களிடையே நட்பு உறவை வளர்க்கும் மாபெரும் இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனம். சீன சர்வதேச வானொலி ஒலிபரப்பும் 38 அந்நிய மொழிகளில் ஒன்றாக தமிழும் இடம் பெற்றிருப்பது தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் வழங்கப்பட்டுள்ள மிகப் பெரிய கௌரவம் என்பதில் ஐயமே இல்லை. இதன் வளர்ச்சிக்காக பாடுபடுவதும் அதன் வாயிலாக இந்திய சீன மக்களிடையே நட்புறவை வளர்ப்பதும் இந்திய சீன மக்கள் அனைவரதும் கடமை. இந்த வகையில் நாம் நேயர்களாக சேர்ந்து கொள்ள வேண்டும்.

1987ம் ஆண்டில் பீகிங் வானொலியாக ஒலிபரப்பானது தற்போது சீன வானொலியாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. நாளுக்கு நாள் நேயர்கள் அதிகரிக்கின்றனர். 1990ம் ஆண்டுகளில் சில மாவட்டங்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே நேயர்கள் இருந்தனர். அவ்வாறிருந்து அவர்கள் அனைவருமே சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் வளர்ச்சிக்காக உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். அப்போது தமிழ் பிரிவின் தலைவராக இருந்த பேராசிரியர் திரு சுந்தரன் அவர்கள் அளித்த ஊக்கத்தால் 1992ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 30ம் தேதி மன்றம் உருவாக்கப்பட்டது. அப்போது 5 உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்த இந்த மன்றம் தற்போது 80க்கும் மேலான அங்கத்தினர்களை உள்ளடக்கிய மன்றமாக வளர்ச்சியடைந்துள்ளது.

சீன இந்தியா நட்புறவு ஆண்டாக 2006ம் ஆண்டை அனுசரிக்க இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன. இந்நிலையில் நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இரு நாடுகளின் நட்புறவு மேலும் மேலும் வலுப் பெற முடியும். சீன வானொலி நேயர்களாகிய நாம் சீன வானொலியின் தமிழ் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு அதிக அளவில் கடிதங்களை எழுதுவது சீனத்துத் தமிழன்பர்களை அவர்கள் அவர்களது பணியில் மேலும் சிறப்புடன் செயல்பட ஊக்குவிப்பது சீன வானொலியை பன்முகங்களிலும் இந்திய தமிழ் மக்கள் இடையே அறியச் செய்வது பிரதிநிதிகள் தமிழகப் பயணம் மேற்கொள்வது அனைத்து தரப்பினருக்கும் அறிமுகம் செய்து இந்திய சீன நட்புறவிற்கு பலமான அத்திவாரத்தை அமைப்பது அடுத்த தலைமுறை நேயர்களை உருவாக்குவது போன்ற முக்கிய முயற்சிகளை மேற்கொண்டு பணிகளைச் செய்ய வேண்டும். இதன் மூலமும் இந்திய சீன நட்புறவை வளர்க்க முடியும். தமிழ்ப் பிரிவு பிரதிநிதிகள் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலமும் நட்புறவு பேணப்படுகின்றது.

சீனாவின் அரசியல் பொருளாதாரம் பண்பாடு தகவல் தொடர்பு சமூகம் சீனாவின் வளர்ச்சி என பல துறைகளைப் பற்றியும் வினா கொடுத்து தமது கருத்துக்களை வெளியிடுவது சீனாவை தமிழ் மக்கள் நன்கு அறியவும் சீன இந்திய நட்புறவு வளரவும் பெரிதும் காரணமாக உள்ளது. இப்போது அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் திரு எஸ் செல்வம் பேளுக்குறிச்சி க. செந்தில், புதுவை நேயர் மன்றத் தலைவர் என், பாலகுமார் போன்றவர்கள் நாள்தோறும் நிகழ்ச்சிகளைக் கேட்டதுமே உடனுக்குடன் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இத்தகைய நேயர்களின் ஈடுபாட்டினாலும் அயராத முயற்சியினாலும் சீன இந்திய நட்புறவு இமயம் போல் ஓங்கி உயர்கின்றது. 2004ம் ஆண்டு எமது முதிய நிபுணர் என்.கடிகாசலம் சீன நட்புறவு விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டிலேயே முதலாவது சீன வானொலி நேயர்கள் மன்றம் இந்திய அரசால் பதிவு செய்யப்பட்டது.

சீனத் தமிழ் ஒலிபரப்பு வளர்ச்சி வரலாறு 42 ஆண்டுகளைக் கடந்து விட்டது. முந்தைய தலைமுறையினரின் அயராத உழைப்பால் உருவெடுத்த சீனத் தமிழ் ஒலிபரப்பு தற்போதைய நிலையில் விறுவிறுப்பாக வளர்ச்சியடைந்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக ஒலிபரப்பாளர்களினதும் நேயர்களினதும் விடா முயற்சியாகும். எனவே நாமும் ஒலிபரப்பின் வளர்ச்சிக்காக நல்ல பல ஆக்கங்களை அனுப்புவதன் மூலமும் சீன இந்திய நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியும். சீனாவுக்கான இந்தியத் தூதரக இராணுவ அதிகாரி கர்னல் நரசிம்மன், முதல் செயலாளர் சிரிதரன் இவ்ர்களின் முயற்சியினாலும் நட்புறவு வளர்ச்சியடைகின்றது. சீனாவுக்கும் இந்தியாவுக்குமான நட்பு சீன மொழிக்கும் தமிழ் மொழிக்குமிடையிலான ஒற்றுமையை வளர்க்க முடியும். இதன் மூலமும் நட்பைப் பேண முடியும். சீன மொழி பேசுபவர்கள் தமிழ் மொழியையும் தமிழ் மொழி பேசுபவர்கள் சீன மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் இரு நாடுகளையும் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும்.

42 ஆண்டுகளுக்கு முன் இல்லாத நிலையில் தமிழ்ப் பிரிவின் பணியாளர்கள் தமிழ் ஒலிபரப்பை நடத்துகின்றனர். இப்போது முதியவர்கள் ஓய்வு பெற்ற போதிலும் தமிழ் ஒலிபரப்பு தொடர்ந்து பல தலைமுறை முயற்சியுடன் வளர்த்து வருகின்றது. 2003ம் ஆண்டு இணையதளம் செயல்படத் துவங்கியுள்ளது. குறைவான பணியாளர்கள் அதிகமான வேலை செய்யும் போது அதன் கடினம் துறையின் வளர்ச்சிக்கு முன்னால் சிறியதாகிவிட்டது. எம் போன்ற நேயர்கள் தொடர்ந்து தேர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ளும் போது ஒளிவீசும் எதிர்காலத்தை அடைய முடியும். செந்தமிழ் ஓசையை உலகெங்கும் பரவச் செய்ய முடியும். இதன் மூலம் நூற்றி முப்பது கோடி மக்கள் தொகையைக் கொண்ட சீனாவையும் நூறு கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவையும் இணைக்க முடியும். இதனால் சீன இந்திய நட்புறவு பலம் பொருந்தியதாக முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பது திண்ணம்.

சீன இந்திய நட்புறவு ஆண்டாக 2006ம் ஆண்டு பிரகடனம் செய்யப்படுவதால் உலக நாடுகளுக்கு எல்லாம் முன்மாதிரியாக திகழ முடியும். நிகழ்ச்சிகளின் தரம் ஒலித்திறன், கட்டமைப்பு ஆகியவற்றின் தரத்தினை உய.ர்த்துவதன் மூலம் அதிகமான நேயர்களை பங்கு கொள்ளச் செய்ய முடியும். புதிய புதிய ஆக்கங்கங்களை ஒலிபரப்பு செய்தல் அடுத்த தலைமுறை நேயர்களை உருவாக்குதல் போன்ற பணிகளை செய்து வருவதன் மூலமும் நட்புறவை நீடிக்கச் செய்யலாம். எம் போன்ற மாணவர்கள் பல்வேறுபட்ட உலக விவகாரங்களில் அக்கறை செலுத்த வேண்டும். இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளின் அரசியல் பொருளாதார கலாச்சார விஷயங்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் பொது அறிவு சம்பந்தமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சீன இந்திய நட்புறவு மேலும் வளர்ச்சியடையச் செய்ய முடியும்.

சீன இந்திய நட்புறவு நீடுழி வாழ்க. நட்பு இமயம் போல் ஓங்கி உயரட்டும். வாழ்க தமிழ் ஒலிபரப்பு, வளர்க இந்திய சீன நட்புறவு.

நன்றி.