சீனாவின் வரி வசூலிப்பு வருமானம்
cri
கடந்த ஆண்டு, சீனாவின் வரி வசூலிப்பு வருமானம் சீராகவும் வேகமாகவும் அதிகரித்தது. 3 லட்சத்து 76 ஆயிரத்து 360 கோடி யுவான் வரித் தொகை அரசு கஜானாவுக்குள் நுழைந்தது. இது, 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட 21 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசிய வரி வசூலிப்புத் தலைமை அலுவலகத் தலைவர் Xie Xu Ren கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் நடைபெற்ற தேசிய வரி வசூலிப்பு பணிக் கூட்டத்தில் பேசுகையில், கடந்த ஆண்டு சீனாவின் வரி வசூலிப்பு வருமானம், மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் வகிக்கும் விகிதாச்சாரம், 18 விழுக்காட்டுக்கு மேலானது என்றும், இது, 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட அதிகம் என்றும் கூறினார்.
|
|