• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-05 14:25:55    
சீனாவின் சிறந்த 10 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்

cri

2006ம் ஆண்டுக்கான சீனாவின் சிறந்த 10 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை சின் ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 110 மீட்டர் தடையோட்ட வீரர் லியு சியாங் முதலிடம் பெறுகிறார். கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் 12.88 வினாடிகள் என்ற உலக சாதனையை படைத்த லியு சியாங் அவரது சிறப்பான வெற்றிகளுக்கும், சாதனைகளுக்குமாக இந்த பட்டியலில் முதலிடம் அளிக்கப்பட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து, அமெரிக்காவின் என்.பி.ஏ எனப்படும் கூடைப்பந்து விளையாட்டு அமைப்பின் ஹூஸ்டன் ராக்கட்ஸ் அணியில் இடம்பெறும் சீனர் யாவ் மிங் சீனாவின் சிறந்த 10 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பட்டியலில் இரண்டாவது இடம் பெறுகிறார்.

அவரைத் தொடர்ந்து, ஒலிம்பிக் பனிச்சறுக்கு விளையாட்டு சாம்பியன் ஹான் சியாவ்பங் மூன்றாவது இடமும், ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் யாங் வெய் நான்காவது இடமும் பெற்றனர்.

யாங் வெய் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சாம்பியன் போட்டியின் 3 தங்கங்களும், அன்மையில் நடந்து முடிந்த ஆசியா விளையாட்டு போட்டிகளில் 4 தங்கங்களும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நான்கு பேரைத் தவிர இப்பட்டியலில் இடம்பெறும் இதர வீரார்கள் மற்றும் வீராங்கனைகள்:

ஸ்கேட்டின் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டின் வாங் மங், ஸ்னூக்கர் விளையாட்டு வீரர் டிங் ஜுந்குய், டென்னிஸ் வீராங்கனைகள் சங் ஜியே மற்றும் யான் சு, வாள்வீச்சு விளையாட்டின் நான் லெய், நீச்சல் போட்டியின் நு பங், பளுத்துகும் விளையாட்டின் சன் யான்சிங்.