• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-05 17:20:51    
சீன மகளிரின் அறிவியல் அறிவு நிலை

cri

சீனத் தேசிய மகளிர் சம்மேளனத்தின் 4வது செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சீனாவின் அறிவியல் சங்கத்தின் பொது செயலர் சாங் துன் ஹோன் அம்மையார், மகளிரின் அறிவியல் அறிவு நிலை கட்டுமானம் பற்றி உரை நிகழ்த்தினார்.

சீனாவின் அனைத்து மகளிர் அறிவியல் அறிவு நிலை, சீன பொது மக்களின் சராசரி நிலையை விட குறைந்தது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் காட்டிலும் பெரிய இடை வெளி உண்டு என்றார் அவர்.

2003ம் ஆண்டு சீன அறிவியல் சங்கம் நடத்திய, சீன பொது மக்களின் அறிவியல் நிலை பற்றியக் கள ஆய்வின் முடிவுக்கிணங்க, ஓரளவுக்கு அறிவியல் தகவல்கள் அறிந்த சீன பொது மக்கள், மொத்த மக்கள் தொகையின் 1.98 விழுக்காடு வகிக்கிறனர். அவர்களில் மகளிர் 1.7 விழுக்காடு வகிக்கின்றனர். இது ஆண்களை விட 0.6 விழுக்காடு குறைவாகும். சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்குமிடையில் பெரும் இடை வெளி இருக்கின்றது. மகளிரின் அறிவியல் நிலை, அவர்கள் பெற்றுள்ள கல்வி நிலையுடன் தொடர்புடையது. கடந்த சில ஆண்டுகளாக, சீன மகளிர், கல்வி பெறும் நிலை, பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், பொதுவாக கூறின், ஒட்டுமொத்த நிலை உயர்வாக இல்லை. இது அறிவியல் கல்வி மற்றும், தொழில் நுட்ப திறன் பற்றிய மகளிரின் தேவையை பாதித்துள்ளது. 2003ம் ஆண்டின் கள ஆய்வின் முடிவுப்படி, எழுத்தறிவின்மையில் மகளிர் ஆண்களை விட 10.49 விழுக்காடு உயர்வாகும். மலை பிரதேசத்திலும் தொலை தூர மலை கிராமங்களிலும் வாழ்கின்ற மகளிர், கல்வி பெறும் வாய்ப்பும், நிலையும், ஆண்கள் பெறும் வாய்ப்பை விட குறைவு என்பது மட்டுமல்ல, நகரில் வாழ்கின்ற மகளிரை விட குறைவும் ஆகும்.

அறிவியல் கல்வி, சமூக மயமாக்கம் அறிவியல் தொழில் நுட்ப பரவல் ஆகியவை பெண்களஇன் தனிச்சிறப்பில் குறைவான கவனம் செலுத்துவதால், மகளிர், அறிவு பெறும் வாய்ப்பும் வழிமுறையும் குறைவாகவுள்ளது. புள்ளிவிபரப்படி, மகளிரும், ஆண்களும் அறிவியல் தொழில் நுட்ப தகவல் பெறும் வழிமுறைகள், வெவ்வேறானவை. செய்தித் யேடுகள், நூல், பயிற்சி ஆகியவற்றின் மூலம், அறிவியல் தொழில் நுட்பத் தகவல் பெற்றிருந்த மகளிரின் எண்ணிக்கை, ஆண்களை விக்ட குறைவு. ஆனால்,உரையாடல் மூலம் தகவல் பெறுவதில் மகளிரின் எண்ணிக்கை அதிகம். ஆண்களைக் காட்டிலும், அறிவியல் தொழில் நுட்ப நடவடிக்கையில் கலந்துக் கொள்கின்ற மகளிரின் எண்ணிக்கையும் குறைவாகும். இதனால் கல்வி நலை, சிந்தனை வழக்கம், பொருளாதாரத் திறன், நேரப்பயன்பாடு வீட்டு கடமை ஆகியவற்றில் அவர்களுக்குமிடையே இடை வெளி நிலவுகின்றது. அதே வேளையில், சீனாவில், பொது மக்களுக்கு வழங்குகின்ற அறிவியல் கல்வி, பரவல் முதலிய பொதுச் சேவை போதுமானதாக இல்லை. குறிப்பாக இந்தச் சேவைகளில், மகளிரின் தனிச்சிறப்பு மற்றும் தேவை மீது பொதுவாக ஆய்வு ஏதும் செய்யப்படுவது இல்லை. எனவே, பெண்கள் அறிவியல் அறிவு பெறுகின்ற வாய்ப்பும் வழிமுறையும் குறைவாக இருக்கிறது.