இவ்வாண்டு முதல், சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் ஒவ்வொரு விவசாயியும் ஆயரும் ஆண்டுக்குக் கிடைக்கும் மருத்துவ உதவித்தொகை, முந்திய 3000 யுவானிலிருந்து, தற்போது 6000 முதல் 8000 வரையாக உயர்ந்துள்ளது.
திருத்தப்பட்டுள்ள திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வேளாண் மற்றும் ஆயர் வட்டாரங்களின் மருத்துவ சிகிச்சை நிர்வாகம் பற்றிய தற்காலிக வழிமுறைகள், இவ்வாண்டின் ஜனவரி முதல் நாள் முதல் நடைமுறைப்படுத்தப்படத் தொடங்கியது. இச்சட்டவிதிகளின் படி, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் அடிப்படை மருத்துவச் சிகிச்சை காப்புறுதி அமைப்பு முறையில் சேர்ந்து, குறைந்தது 10 யுவான் வழங்கிய ஒவ்வொரு விவசாயியும், ஆயரும், ஆண்டுக்கு 8000 யுவான் மருத்துவ உதவியைப் பெறலாம். 10 யுவான் வழங்காத ஒவ்வொரு விவசாயியும் ஆயரும் ஆண்டுக்கு 6000 யுவான் மருத்துவ உதவியைப் பெறலாம்.
|