திபெத்தின் நாட்டுப்புறப் பண்பாட்டு மரபு செல்வம்
cri
"மன்னர் Gesar", ஆடல் Repa, Thangka ஆகியவற்றை பிரதிநிதிகளாகக் கொண்ட, முதலாவது தொகுதி நாடு மற்றும் தன்னாட்சி பிரதேச நிலை புலப்படாத பண்பாட்டு மரபுச்செல்வம் என்ற பட்டியங்களில் சேர்ந்த திபெத்தின் நாட்டுப்புற பாரம்பரிய பண்பாடு, கடந்த சில பத்து ஆண்டுகளில், பயன்தரும் முறையில் பாதுகாக்கப்பட்டு, கையேற்றப்பட்டுள்ளன. திபெத்தின் லாசாவில் நடைபெற்றக் கூட்டம் ஒன்றிலிருந்து எமது செய்தியாளர் இதை அறிவித்தார். கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகள் முதல், திபெத் தன்னாட்சி பிரதேசம் மற்றும் இப்பிரதேசத்தின் நகர்களில் பண்பாட்டுச் செல்வம் காப்பாற்றுதல், சீர்படுத்துதல் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. நகர்கள், கிராமங்கள் மற்றும் கோயில்களில் பன்முக ஆய்வு மற்றும் பதிவுப் பணிகளை மேற்கொள்ள, ஆய்வுக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது, முழு பிரதேசத்திலும், 10 ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர்களைப் பணியாளர்கள் பேட்டி கண்டு, அதிகமான ஒலி மற்றும் ஒளித் தகவல்களை பதிவு செய்து, பத்து ஆயிரத்துக்கு அதிகமான படங்களை பிடித்து, நாட்டுப்புறப் பண்பாடு பற்றிய 30க்கு அதிகமான படைப்புகளை வெளியிட்டுள்ளனர். திபெத் நாட்டுப்புறப் பண்பாட்டு மரபுச் செல்வம் பன்முகங்களிலும், உரிய முறையிலும் பாதுகாக்கப்பட்டுள்ளன. திபெத் பண்பாட்டு அலுவலகத்தின் பொறுப்பாளர் இதை தெரிவித்தார்.
|
|