• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-08 22:14:04    
சீனாவின் நவீனமயமாக்க வேளாண் துறை

cri

நகரங்களுக்கும் கிராமங்களுக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்கும் பொருட்டு, இவ்வாண்டு முதல், சீனா, நாடு தழுவிய அளவில் புதிய கிராம கட்டுமானத்தை மேற்கொண்டு, ஏராளமான நிதியை ஒதுக்கீடு செய்து, விவசாயிகளுக்கு உதவி அளித்து, கிராமங்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தத் தொடங்கியது. பாரம்பரிய பின்தங்கிய வேளாண் துறையின் உற்பத்தி வழிமுறையை மாற்றி, பயன் மிக்க நவீனமயமாக்க வேளாண் துறையை நிறுவுவது, புதிய கிராமக் கட்டுமானத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். இன்றைய நிகழ்ச்சியில், நவீனமயமாக்க வேளாண் துறையை வளர்ப்பதால் வெற்றி பெற்றுள்ள கிராமம் ஒன்றை அறிமுகப்படுத்துகின்றோம்.

வடகிழக்கு சீனாவிலுள்ள HEI LONG JIANG மாநிலத்தில், XING SHI SI என்னும் கிராமம் அமைந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன், வெளியூர்களிலிருந்து வந்த குடியேறியவர்கள் இந்தச் சிற்றூரை அமைத்துள்ளனர். அப்போது, இங்கு வீடுகளும் விளைநிலங்களும் ஏதுமில்லை. இப்பொழுது, இந்த கிராமம், புகழ்பெற்ற வளமடைந்த கிராமமாக மாறியுள்ளது. பைஞ்சுதை பாதை, முழுக் கிராமத்தைக் கடந்து சென்றது. பாதையின் இருப் பக்கங்களில், தோட்டத்துடன் கூடிய கட்டிடங்கள் உள்ளன. சுமார் 200 சதுர மீட்டர் அளவு வீட்டில், நவீனமயமாக்க வீட்டு பயன்பாட்டு மின்சாரக் கருவிகள் அதிகமாக இருக்கின்றன. வாகன அறையில் உயர் நிலை கார்களைக் காணலாம்.

75 வயதான ZHANG WEI LIANG என்னும் முதியோர், இங்கு குடியேறிய முதலாவது தொகுதி கிராமவாசிகளில் ஒருவராவார். 50 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்தின் நிலைமையை மீளாய்வு செய்த போது, அவர் கூறியதாவது:

அப்பொழுது, கிராமத்தின் சுற்றுப்புறத்தில் ஏதுமில்லை. புல் மட்டும் தான். தரையில் ஒரு மரப்பலகையில் XING SHI SI கிராமம் என்பது எழுதப்பட்டிருந்தது என்றார் அவர்.

தற்போது வாழ்க்கை, கனவு போல். XING SHI SI கிராமத்தில் 80 விழுக்காட்டுக் குடும்பங்கள், தோட்டத்துடன் கூடிய வீட்டில் வாழ்கின்றன. கிராமவாசிகளின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புள்ளிவிபரங்களின் படி, கடந்த ஆண்டு, இக்கிராமத்தின் மொத்த வருமானம், 100 கோடி யுவானை எட்டியுள்ளது.

நவீனமயமாக்க வேளாண் துறையை வளர்க்கும் பாதையை மேற்கொள்வது, XING SHI SI கிராமத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். பல ஆண்டுகளுக்கு முன், XING SHI SI கிராமம், வேளாண் துறை இயந்திரமயமாக்கத்தையும் விளை நில நீர் சேமிப்பையும் ஆக்கப்பூர்வமாக வளர்க்கத் துவங்கியது. கிராமத்தில் ஆயிரத்துக்குக் கூடுதலான ஹெக்டர் பரப்பளவு விளை நிலங்கள், உடன்படிக்கை மூலம், 18 விவசாயக் குடும்பங்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. LIU HONG WEI என்பவர், பயிரிடுவதில் ஈடுபட்டார். மக்காச்சோளம் மற்றும் அவரைகளைப் பயிரிடுவதால், இவ்வாண்டு, அவருடைய குடும்பத்தினரின் மொத்த வருமானம் சுமார் 5 லட்சம் யுவானை எட்டக் கூடும். இவ்வருமானத்திற்கு LIU HONG WEI மனநிறைவு தெரிவித்தார். அவர் கூறியதாவது:

மாவட்டத்தின் வேளாண் துறை தொழில் நுட்ப விரிவாக்க மையத்தின் ஆசிரியர்கள், ஆண்டு தோறும் எங்களுக்குப் பயற்சி அளித்து, இவ்வட்டாரத்தில் பயிரிடுவதற்குப் பொருத்தமான நல்ல விதைகளை பரிந்துரைக்கின்றனர். நாங்கள் ஒவ்வொரு ஆண்டிலும், வெளியூர்களில் பயணம் மேற்கொண்டு, மற்றவரின் அனுபவத்தைக் கற்றுக்கொண்டு அதை பயன்படுத்துகின்றோம் என்றார் அவர்.

வேளாண் துறை இயந்திரயமாக்கத்தை நிறைவேற்றிய பிறகு, XING SHI SI கிராமம், வேளாண் உற்பத்தி பொருட்கள் பதனீட்டுத் துறையை ஆக்கப்பூர்வமாக வளர்த்துள்ளது. தற்போது, வேளாண் துறை, வனத்தொழில், கால்நடை வளர்ப்பு, சுற்றுலா ஆகியவற்றை இணைக்கும் அரசு நிலை பெரிய ரகக் குழுமமான HEI LONG JIANG FUHUA குழுமம், இக்கிராமத்தில் நிறுவப்பட்டுள்ளது. FUHUA குழுமத்தைச் சேர்ந்த மருந்து ஆலையின் துணைத் தலைவர் ZHANG KECHENG எமது செய்தியாளரிடம் பேசுகையில், XING SHI SI கிராமத்தில், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, உள்ளூரின் வேளாண் துறையை வலுவாக ஆதரித்து, கிராமப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

இந்தத் தொழில் நிறுவனங்கள், தானியத்தின் பதனீடு, வேளாண் துறையின் தொழில் துறைமயமாக்கம் ஆகியவற்றைச் சார்ந்து செயல்படுத்தி வருகிறது மட்டுமல்ல, கிராமத்தின் உழைப்பு ஆற்றலுக்கு ஏற்ற வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளது என்றார் அவர்.

தவிரவும், உயிரின வேளாண் துறையின் முக்கியத்துவத்தை XING SHI SI கிராமம் உணர்ந்து, கிராமத்தின் இயற்கைச் சூழலை மேம்படுத்த முயற்சி செய்துள்ளது. கிராமவாசிகள், வீட்டு பக்கத்தில் புற்களையும் மலர்களையும் வளர்த்து, காற்றையும் மணலையும் தடுக்கும் காட்டை உருவாக்கியுள்ளனர். தற்போது, சுமார் 600 ஹெக்டர் பரப்பளவுடைய தடுப்பு காட்டினால், XING SHI SI கிராமத்தில் உயிரின வாழ்க்கை நிலை, சம நிலையடைந்துள்ளது என்று, இக்கிராமத்தின் பொறுப்பாளர் FU HUA TING கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

புதிய கிராம கட்டுமானத்தில், இயற்கைச் சூழல், மிகவும் முக்கியமானது. கிராமத்தின் நிலைமையை முற்றாக மேம்படுத்த வேண்டுமானால், இன்பமான சூழலை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார் அவர்.

இக்கிராமத்தின் பொருளாதார வளர்ச்சியுடன், பொது லட்சிய வளர்ச்சி மேம்படுத்தப்பட்டது. தற்போதைய XING SHI SI கிராமத்தில், சாலைகள் ஒழுங்காக இருக்கின்றன. பல்வேறு அடிப்படை வசதிகள் முழுமைபடுத்தப்பட்டுள்ளன. நகர மயமாக்கம் துவக்க ரீதியில் ஏற்பட்டது. தவிர, விவசாயிகளின் பண்பாட்டு வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்டு, கிராமத்தில், பண்பாட்டு மண்டபமும் விளையாட்டுத் திடலும் கட்டப்பட்டுள்ளன. அடுத்த ஐந்தாண்டு வளர்ச்சி வரைவுத்திட்டத்தை வகுத்து, கிராமவாசிகளுக்கு மேலும் பெரிய நலனை வழங்க வேண்டும் என்று கிராமத்தின் பொறுப்பாளர் FU HUA TING விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

நான்கு இலக்குகள் உள்ளன. முதலாவது, கிராமத்தின் மொத்த வருமானம், 400 கோடி யுவானை அதிகரிக்க வேண்டும். இரண்டாவது, நபர்வாரி வருமானம், 20 ஆயிரத்தை எட்ட வேண்டும். மூன்றாவது, ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒரு தோட்ட வீடு இருக்க வேண்டும். நான்காவது, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், கிராமவாசிகளுக்கு காப்புறுதி வழங்க வேண்டும் என்றார் அவர்.