பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான சிறப்பு மருத்துவமனைகள்
cri
2008ம் ஆண்டு நடைபெறவுள்ள பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான சிறப்பு மருத்துவமனைகளாக பெய்சிங் மாநகரின் 20க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் அனைத்து மருத்துவர்களுக்கும் ஆங்கில மொழி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெய்சிங் மாநகராட்சி சுகாதார வாரியத்தின் தகவலின் படி, இந்த குறிப்பிட்ட ஒலிம்பிக் மருத்துவமனைகளில் வெளிநாட்டு பயணிகளுக்கு மருந்து மற்றும் சிகிச்சை பற்றிய விபரங்கள் சீன மொழியிலும், ஆங்கில மொழியிலும் எழுதப்படும் எனப்படுகிறது. மேலும், சீன மொழி தவிர்த்து பிற மொழிகள் பேசத் தெரிந்த முதலுதவித் தொண்டர்கள் பணியமர்த்தப்படுவர். மருத்துவமனைகளில் வெளிநாட்டினர் தங்களது சிகிச்சைக்கான செலவை சர்வதேச வங்கிக் அட்டைகள், கடனட்டைகள் மூலம் செலுத்தும் வகையில் வங்கிகளுடன் பெய்சிங் மாநகராட்சி சுகாதார வாரியம் ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இது தவிர பெய்சிங் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் மற்ரும் வீராங்கனைகள் மற்றும் பிரதிநிதிக்குழுக்களின் பாதுகாப்புக்கென பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு தொடர்பான தங்குமிடங்கள், பயிற்சி தளங்கள், விளையாட்டரங்குகள் ஆகியவற்றில் உணவு மற்றும் குடிநீர் கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
|
|