சீன சுதேச மருந்து உட்கொள்வதால் ஏற்பட்ட பாதகமான பக்க விளைவு பற்றிய சில வழக்குகளை அண்மையில் பிரிட்டிஷ மருந்து பாதுகாப்பு வாரியம் வெளியிட்டதோடு பொது மக்கள் சீன சுதேச மருந்தை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. "கலப்பு கற்றாழை மருந்து"எனப்படும் சீன சுதேச மருந்தில் பாதரச அளவு பிரிட்டனின் வரையறையைத் தாண்டியுள்ளது POLY GONUM MULTIFLORUM எனப்படும் மற்றொரு வகை மருந்து ஈரல் அழற்சிக்கு வழிகோலும் என்று அது கருதுகின்றது. இதனால் சீன சுதேச மருந்தின் பயன்பாட்டில் பலர் சந்தேகம் கொள்கின்றனர். இது பற்றி எமது செய்தியாளர் சில நிபுணர்களை பேட்டிக் கண்டார்.

சீன சுதேச மருந்து நச்சு தன்மை கொள்ளுமா?என்பதை ஆராயும் போது உண்மையில் மருந்தினால் ஏற்பட கூடிய பாதகமான பக்க விளைவைக் குறிக்கின்றது. சீன மருந்து மூலிகைகளால் உருவாக்கப்ப்டட்து. ஆகவே அதற்கு நச்சு தன்மை இருக்காது என்று மக்கள் பொதுவாக கருதுவதுண்டு. இந்த தவறான கருத்தை கொண்டிருப்பதால் மருந்தினால் ஏற்பட்ட பாதகமான பக்க விளைவை உணர்ந்து கொள்ளும் போது திகைப்படைகின்றனர். சீன சுதேச மருந்து அறிவியல் கழகத்தின் முதன்மை ஆயவாளர் லி சியன் தா இது பற்றி கூறுகிறார்.

"சீன சுதேச மருந்தில் நச்சு பொருட்கள் இல்லை என்ற கூற்று அறிவியல் பூர்வமானத்தல்ல. அது தவறு என்றும் கூறலாம். மருந்து என்றால் 30 விழுக்காடு நச்சு தன்மை வாய்ந்தது. இது பொது அறிவு"என்றார்.
உண்மையில் சீன சுதேச மருந்து என்றாலும் சரி மேலை நாட்டு மருந்து என்றாலும் சரி அவற்றுக்கு பாதமான பக்க விளைவு ஏற்படக் கூடும். எடுத்துக்காட்டாக மேலை நாட்டு மருந்துகளில் அடிக்கடி பயன்படும் பென்சீரியம் PENICILLIUM அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடும். சீன சுதேச மருந்துகளில் ஈரல் பாதுகாப்புக்கான மருந்துகளில் ஒன்றான MANCHURIAN DUTCHMANSPIPE STEM என்பது சிறு நீரகத்துக்கு கடும் தீங்கு விளைவிக்கும். மருந்துகளின் பாதகமான பக்க விளைவு தவிர்க்கப்பட முடியாததாகும். மேலை நாட்டு மருந்துகள் எந்றாலும் சீன சுதேச மருந்துகள் என்றாலும் இவற்றில் ஆபத்து மறைந்திருக்கும்.

சீன சுதேச மருந்துக்கு நச்சுத் தன்மை இருக்காது என்ற கருத்தை நீக்கிய பின் மருந்துகளால் பாதகமான பக்க விளைவு ஏற்படும் என்ற ஆப்த்து நிலவிய போதிலும் ஒரு சீன சுதேச மருந்தின் ஆராய்ச்சி மற்ரறும் உற்பத்தி பெருமளவிலான பரிசோதனைகளுக்குப் பின் தான் வெளிவரும். அதன் பாதுகாப்புத் தன்மை அறிவதற்கான கண்டிப்பான பரிசோதனைக்கு முன் நோயாளிகளிடம் வராது. விர்பனை மற்றும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு செல்லாது. எனவே "சீன சுதேச மருந்து நச்சுள்ளது என்று கூறுவது சரியில்லை. தற்போது சீன சுதேச மருந்துகளின் பயன் மற்றும் பயன்பாட்டின் மீது மக்கள் தப்பான எண்ணம் கொண்டிருக்கின்றார்கள்" என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒன்று நியாயமற்ற முறையில் சீன சுதேச மருந்து உட்கொள்வதால் ஏற்பட்ட பாதகமான பக்க விளைவால் சீன மருந்து நச்சுத் தன்மை வாய்ந்தது என்று மக்கள் சந்தேகம் கொள்கிறார்கள்.
|