கலை......வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவரங்கம் நிகழ்ச்சி நேரம். கிளிடஸ்......கலை கடந்த இரண்டு முறை நாம் கோழிக் கறி சமைப்பது பற்றி அறிமுகப்படுத்தினோம். இந்த முறை என்ன உணவு வகை பற்றி கற்றுத் தரப் போகிறோம்? கலை.......ஆட்டிறைச்சி சமைப்பது பற்றி அறிமுகப்படுத்தலாமா? கிளிடஸ்........கோழிக் கறி, காளாங், கீரை முதலியவை பற்றி ஏற்கனவே அறிமுகபடுத்தினோம். ஆகவே இந்த முறை ஆட்டிறைச்சி சமைப்பதென்ற யோசனை பரவாயில்லை. வரவேற்கிறேன். கலை.....சரி அப்படியென்றால் நாம் காய்கறிச் சந்தைக்குப் போகலாம். கிளிடஸ்.....முதலில் என்ன ஆட்டிறைச்சி வாங்க வேண்டும்? கலை.......ஆட்டின் மார்பு இறைச்சி வாங்க வேண்டும். அதாவது எலும்பு கொண்ட இறைச்சி வாங்க வேண்டும். கிளிடஸ்.......ஆட்டிறைச்சி தவிர வேறு எந்த வகை இணைப்பு பொருட்கள் தேவை?
கலை......அதுவா. வங்காயம், உருளைக் கிழங்கு, கேரெட். தலா ஒன்று இருந்தால் போதும். கிளிடஸ்.......ஆட்டிறைச்சிக் குழம்பு சமைப்பதற்குத் தேவையான உணவு பொருட்கள் தயாராகிவிட்டன. சோயாசோஸ் போன்ற இணைப்புப் பொருட்கள் நமக்குத் தேவையா? கலை......கண்டிப்பாகத் தேவை. இதில் ஐயம் ஒன்றும் இல்லை.
கிளிடஸ்......சரி பிறகு என்ன செய்ய வேண்டும். சொல்லுங்கள். கலை.......நாற்றம் நீக்குவதற்காக ஒரு பெரிய தேக் கரண்டி சமையல் மது, மசாலாத் தூள் 3 கரண்டி, உப்பு அரை தேக் கரண்டி, சர்க்கரை ஒரு தேக் கரண்டி. தண்ணீர் ஒரு கோபை அளவு. இவையனைத்தும் இருந்தால் போதும்.
|