கடந்த ஜூலை திங்கள் முதல் நாள் சிங்ஹேய்-திபெத் ரயில் பாதை திறந்து வைக்கப்பட்ட பிறகு, பயணிகளின் எண்ணிக்கை, 11 லட்சத்து 80 ஆயிரத்தை எட்டியுள்ளது. 11 லட்சத்து 60 டன் சரக்கு ஏற்றிச்செல்லப்பட்டுள்ளது. சிங்ஹேய் மற்றும் திபெத்தின் சமூக பொருளாதார வளர்ச்சி வலிமையாக தூண்டப்பட்டது.
இன்று 2007 சீனத் தேசிய ரயில் துறை பணிக்கூட்டத்தில் பேசிய சீன ரயில் துறை அமைச்சர் LIU ZHI JUN, சிங்ஹேய்-திபெத் ரயில் பாதை திறந்து வைக்கப்பட்டதிலிருந்து, சீராக இயங்கி வருகிறது என்றும், கடுமையான போக்குவரத்து விபத்தும், பணியாளர்கள் மற்றும் பயணிகளின் உயிரிழப்பும் ஏற்பட வில்லை. இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் பயனுள்ளதாக பேணிகாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
|