• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-18 19:07:16    
சீனாவின் செங்து நகரில் தனிச்சிறப்பு வாய்ந்த பொழுதுபோக்கு வீதி-சின்லி வீதி

cri

சின்லி வீதி, தென் மேற்கு சீனாவின் ஸ்சுவான் மாநிலத்து செங்து நகரின் தென் பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 350 மீட்டர் நீளமுடைய இவ்வீதி, தொன்மை வாய்ந்த பொழுதுபோக்கு வீதியாகும். இரண்டு பெரிய செந் நிற அலங்கார விளக்குகள் தொங்கவிடப்பட்ட கோபுர வாயிலுக்குள் நுழைந்ததும், பயணிகள், தொன்மை வாய்ந்த வீதியை வந்தடைந்தனர் என்று கூறலாம்.

தரையில் கறுப்பு நிறக் கல்கள் பதிக்கப்பட்ட இவ்வீதியின் இரு பக்கங்களிலும் ஒரே மாதிரியான தொன்மை வாய்ந்த கட்டிடங்கள் காணப்படுகின்றன. இவ்வீதி பற்றி சீனத் தைவான் மாநிலத்து திரு யாங்மிங் கூறியதாவது, இன்று இங்கு வந்திருக்கின்றேன். இவ்வீதி பரவாயில்லை. பண்டைய பொருட்கள் பல இங்கு விற்பனை செய்யயப்படுகின்றன. செங்து நகர உணவுப் பொருட்கள் சுவையானவை என்றார் அவர்.

சின்லி வீதியில் கைவினைத் தொழிலாளர்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள் பயணிகளால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மண்ணால் செய்யப்பட்ட மனித உருவச்சிலை, காகிதக் கத்தரிப்பு முதலியவை, மக்கள் பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் காணக் கூடிய பொருட்களாகும். இவற்றைக் கண்டதும் பயணிகளுக்கு அவர்களது குழந்தைக் கால மகிழ்ச்சி நினைவுக்கு வரும்.

ஸ்சுவான் மாநிலத்தின் சுசின் என்னும் ஒரு வகை பட்டுத் துணி உலகில் புகழ்பெற்றது. சுசின், இவ்விடத்தின் சிறப்புப் பட்டுத் துணியால் தயாரிக்கப்பட்டது. சின்லி வீதியில் செங்து நகரின் பிரபல சுசின் பட்டுத் துணி விற்பனை செய்யப்படுகிறது. சின்லி வீதியின் நடுப்பகுதியில் ஒரு விசாலமான இடம் உள்ளது. இவ்விடத்தில் காணப்படும் தொன்மை வாய்ந்த நாடக மேடையில் குறிப்பிட்ட நேரத்தில் சிறந்த ஸ்சுவான் நாடகம் அரங்கேற்றப்படும்.
ஆனால், பயணிகள் சின்லி பாவைக் கூத்தைக் கண்டுகளிக்க அதிகமாக விரும்புகின்றனர்.

தோல் பாவை, சீனாவின் பாரம்பரியக் கலையாகும். சீனாவில் இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடையது. சின்லியிலுள்ள தோல் பாவைக் கூத்து அங்காடிகளுக்கு முன் நாள்தோறும் பயணிகள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக, வெளிநாட்டுப் பயணிகள் சிலர், தோல் பாவைக் கூத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

இது பற்றி ஆஸ்திரேலிய பெண் பயணிகளான கேத்தரின் ஜோன்ஸும் ராய் ஜாக்சனும் கூறியதாவது, என் பெயர் கேத்தரின் ஜோன்ஸ். என் பெயர் ராய் ஜாக்சன். நாங்கள் இருவரும் ஆஸ்திரேலிய நாட்டவர்கள். இங்கே வந்து 10 நிமிடம் தான் ஆகிறது. என்றாலும், இங்குள்ள சூழ்நிலை எங்களை ஈர்த்துள்ளது. இவ்வீதியெங்கும் செந் நிற அலங்கார விளக்குகள் அழகாகக் காணப்படுகின்றன.

தோல் பாவைக் கூத்து நிகழ்ச்சி அரங்கேற்றத்தைக் கண்டுகளிக்க மிகவும் விரும்புகின்றோம். இது நகைச்சுவையானது என்று அவர்கள் கூறினர். தோல் பாவைக்கூத்து நிகழ்ச்சி மக்களால் வரவேற்கப்படுவதை அறிந்துகொண்ட தொடர்புடைய பணியாளர் சோயிநுன் கூறியதாவது,

உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பர்கள் பலருடன் பழகியுள்ளேன். கடந்த நவம்பர் திங்களில் இத்தாலியத் தொலைக் காட்சி நிலையத்தின் பணியாளர் ஒருவர், தோல் பாவைக்கூத்து நிகழ்ச்சியைத் தயாரிப்பதற்கான விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியை எவ்வாறு தயாரிப்பது, அரங்கேற்றுவது என்பனவற்றை அவரிக்குச் சொல்லிக்கொடுத்தேன்.

அவர் இதை தமது நாட்டு மக்களிடம் கற்பித்த பின்னர், அந்நாட்டு மக்கள் சீனப் பண்பாட்டை அறிந்துகொள்ளலாம். சீனப் பண்பாட்டை வெளிநாட்டுக்குப் பரப்புவதே முக்கிய நோக்கம் ஆகும் என்றார் அவர். பாரம்பரிய விழா நாட்களில் சின்லி வீதியில், மக்களின் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறும்.

எடுத்துக் காட்டாக, யுவான் சியெள விளக்கு விழா, துவான் வூ திருவிழா,( துவான் வூ திருவிழாவின் போது சுன் சியு என்னும் ஒருவகை உணவைச் சாப்பிடுவதில் போட்டி, அதாவது, யார் அதிகமாக சுன் சியுவைச் சாப்பிட முடியும் என்பது பற்றிய போட்டி நடைபெறும்.) சுன் சியு திருவிழா (சுன் சியு திருவிழா இரவில், சீன மக்கள் நிலா கேக், பழங்கள் முதலியவற்றை படையலிட்டு, நிலாவை வழிபடுகின்றனர்.)