• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-25 19:49:49    
செங்து நகரில் சின்லி வீதி

cri

சின்லி வீதியில் கைவினைத் தொழிலாளர்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள் பயணிகளால் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. பாரம்பரிய விழா நாட்களில் சின்லி வீதியில், மக்களின் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைத்து நிகழ்ச்சிகளும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும்.

நகரவாசிகளும், பயணிகளும் என பலர் இவற்றில் கலந்துகொள்கின்றனர். சுவையான உணவுகளினால் செங்து நகரம் புகழ்பெற்றுள்ளது. ஸ்சுவான் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பிரபல உணவு வகைகளும் சின்லி வீதியில் கிடைக்கின்றன.

எடுத்துக்காட்டாக, வரலாற்று புகழ் மிக்க சாங்ஃவி என்பவரின் பெயரால் சூடப்பட்ட சாங்ஃவி மாட்டிறைச்சி, சீன மக்காச் சோள மாவில் சர்க்கரையை வைத்துத் தயாரிக்கப்பட்ட ஒரு வகை உணவு, லே தான் யுவான் என்னும் வெண்ணிறமுடைய உருண்டை வடிவச் சிற்றுண்டி முதலியவை குறிப்பிடத் தக்கவை.

பாரம்பரிய தேநீர் அறை, நாடக மேடை ஆகியவற்றைத் தவிர, சின்லி வீதியில் காஃபியகமும், மதுபான விடுதியும் உள்ளன. தனிச்சிறப்பு வாய்ந்த பாணியில் கட்டியமைக்கப்பட்ட மதுப்பான விடுதியில் நவீன மணம் வீசுகின்றது. எனினும், அது, பெரும் அளவிலோ சிறிய அளவிலோ சின்லி வீதியின் தொன்மை வாய்ந்த பாணியுடன் இணைந்து அழகாக காட்சி அளிக்கின்றது.

பயணிகளுக்குக் களைப்பாக இருக்கும் போது, இவ்விடத்தில் சிறிது ஓய்வு எடுக்கலாம். அல்லது, காப்பி வாங்கிச் சுவைத்த வண்ணம் அமைதியாக அமர்ந்து வீதியில் சென்றுவரும் மக்களைப் பார்க்கலாம். சின்லி வீதி, ஸ்சுவான் மாநிலத்தின் உள்ளூர் பண்பாடும் வணிகமும் செவ்வனே இணைந்திருக்கும் வீதி ஆகும்.

ஸ்சுவான் பாணியில் கட்டியமைக்கப்பட்ட இவ்வீதி, 2004ஆம் ஆண்டு மக்களுக்குத் திறந்துவிடப்பட்டது முதல் இதுவரை, ஆயிரக்கணக்கான பயணிகளைத் தன் பால் ஈர்த்துள்ளது. சின்லி வீதிக் குடியிருப்புப் பொறுப்பாளர் சாங்லிச்சின் அம்மையார் கூறியதாவது,

செங்து நகரம், பிரபல வரலாற்றுப் பண்பாட்டு நகரம் ஆகும். மக்களின் பழைய வீடுகளின் காட்சியையும் தொன்மை வாய்ந்த செங்து வீதியின் நிலைமையையும் மக்களுக்குக் காண்பிக்கும் பொருட்டும், ஸ்சுவான் மாநிலத்து மக்களின் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிக்கும் பொருட்டும் இவ்வீதியைச் சீரமைத்திருக்கின்றோம் என்றார் அவர். 

சின்லி பண்பாட்டு வீதி, செந்து நகரின் wuhouci பொருட்காட்சியகத்தின் பக்கத்தில் அமைந்துள்ளது. சின்லி வீதியில் வசதியுடன் கூடிய ஹோட்டல்களும் தங்கும் விடுதிகளும் பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன. உணவு வீதியில் ஸ்சுவான் மாநிலத்தின் பாரம்பரிய சிற்றுண்டிகள் முக்கிய இடம் பெறுகின்றன. உணவுப் பொருட்களின் விலை மிகவும் மலிவு. இருபது அல்லது முப்பது ரன்மின்பி யுவான் செலவழித்தால் தரமான உணவை உண்ணலாம்.

அடுத்து சுற்றுலா பற்றிய தகவலை வழங்குகின்றோம் சியாமன் நகரில் சியாமன் நகரில் போக்குவரத்து, மிகவும் வசதியாக உள்ளது. கப்பல், தொடர் வண்டி, விமானம் மூலம் அங்கு சென்றடையலாம். இவற்றில், விமானப் போக்குவரத்து குறிப்பிடத் தக்கது. பெய்ஜிங், சாங்காய், குவாங்சோ, சிங்தௌ போன்ற பெரிய நகரங்களிலிருந்து, 2 மணி நேரத்தில் விமானம் மூலம் அங்குச் செல்லலாம். டோக்கியோ, பாங்கொக், சிங்கப்பூர், சியோல் ஆகியவற்றிலிருந்து,சியாமன் நகருக்கு விமானப் போக்குவரத்து உண்டு.

நகரப் பகுதியிலிருந்து, சுமார் 20 நிமிடத்தில், சியாமன் நகரின் சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்ல முடியும். நன்புதொ, வான்ஷி மலை தாவரப் பூங்கா போன்ற காட்சித் தலங்களில், பேருந்து நிலையம் உண்டு. வாடகை காரின் கட்டணம், மிகவும் குறைவு. உறைவிட வசதி மக்கது சியாமன் நகர். இயற்கை காட்சியினாலும், கோல்ப் மைதானத்தினாலும், சுற்றுலா வசதி, தரமான சேவை ஆகியவற்றின் காரணமாகவும், ஆண்டுதோறும் அதிகமான உள் நாட்டு வெளிநாட்டுப் பயணிகளை அது ஈர்த்துள்ளது.