• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-10 13:05:01    
ச்சிங்குள்ளர்

cri
புத்த சமாமியார் ஒருவர் நன்கொடை வசூலிப்பதற்காக-அல்லது கெளரவமாகப் பிச்சை எடுப்பதற்காக ஒரு வள்ளலிடம் போனார்.
ஐயா, நீங்க பெரிய கொடைவள்ளல். உங்ககிட்ட இல்லாத செல்வம் இல்லே என்று துதிபாடினார். வள்ளல் கேட்டுக்கொண்டு பேசாமல் இருந்தார். 'சரி, இந்த ஆளை கொஞ்சம் பயமுறுத்தி பார்ப்போம்' என்று நினைத்த சமாமியார் 'புத்த மதத்தைக் கட்டிக் காப்பாத்துறதுக்காக பணம் கொடுத்தால், பெரிய தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்' என்றார்.
'அப்படியா? அது என்ன சாமி பெரிய தண்டனை?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார் வள்ளல்.
நீங்க செத்துப்போனீங்கன்னா அடுத்த உலகத்துல ரம்பத்தால அறுபடும் தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். அதனால ஏதாச்சும் பெரிய மனசு பண்ணி,' என்று பல்லிளித்தார் சாமியார்.
கொடை வள்ளல் கொடாத வள்ளலாக இருந்து விட்டார்.
சிறிது காலத்திற்குப் பின்னர், வள்ளலும், சாமியாரும் இருவருமே இறந்து விட்டனர். மன்னிக்க முடியாக பல பாவங்களை சாமியார் செய்திருந்தபடியால், அவரை ரம்பத்தால் அறுத்து சிகத்திரவதை செய்து கொண்டிருந்தனர்.
'என்னய்யா சாமியாரே, உனக்கா இந்த கதி?' என்று எகத்தாளமாகக் கேட்டார் வள்ளல்.
கொஞ்சம் சுதாரித்துக் கொணட் சாமியார், 'ஐயா, உங்களுக்கு சில விஷயங்கள் புரியாது' என்று மூடுமந்திரமாகச் சொன்னார்.
'புரியும் படியா சொல்லுய்யா?' என்றார் வள்ளல்.
ஐயா, நம் உலகத்துல இருக்கிற கோயில்களில் எல்லாம் பாவங்கள் அதிகமாகி விட்டன. சாமியார்களுக்குப் பஞ்சம் வந்தாச்சு. அதனால நரகச்சக்கரவர்த்தி போட்ட புதிய திட்டத்தின் படி, ஒரு சாமியாரை ரம்பத்தால அறுத்து, இரண்டு சாமியார்களா பிரித்து பூலோகத்துக்கு அனுப்பறாங்க என்று சாமர்த்தியமாக விளக்கம் அளித்தார்.
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.


உருவு கண்டு எள்ளாமை
சீன தேசத்தில் வு என்கிற ஓர் அறிஞர் இருந்தார். அவர் தலைக்கனம் பிடித்த தற்பெருமைக்காரர். மற்றவர்களை தோற்றத்தை வைத்து எடைபோட்டு, துச்சமாக ஒரு தூசு போல நடத்துபவர். ஒரு முறை, அவருடைய வாழ்க்கையில் அபூர்வமான ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு பெரிய விருந்துக்கு அழைக்கப்பட்டார். வழக்கம் போல கர்வத்துடன் நடந்து கொண்டார். அப்போது, பருத்தித் துணியால் தைத்த அங்கி அணிந்த ஒரு மனிதர் விருந்து மண்டபத்திற்குள் தாமதமாக நுழைந்தார். அவரைக் கண்டதும், 'இவனெல்லாம் ஒரு மனுசனா? இவங்கிட்ட என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?' என்கிற தோரணையில் மிகவும் கர்வத்தோடு, தலையை மட்டும் அசைத்து, கையை லேசாகத்தூக்கி, அரைவணக்கம் செலுத்தினார். ஆனால் அதன் பிறகு நடந்தவை எல்லாம் தலைகீழாக இருந்தன. விருந்து கொடுக்கும் செல்வந்தர், தாமதமாக வந்த சாதாரண மனிதனை ஓடி ஓடி உபசரித்தார். மற்ற விருந்தினர்களும் அந்த மனிதரைக் கண்டு மரியாதையாக ஒதுங்கினார்கள். இதையெல்லாம் பார்த்ததும் அறிஞருக்கு வயிற்றைக் கலக்கியது. 'நாம் நினைச்சமாதிரி இவர் சாதாரண ஆளு இல்லை போலிருக்கே' என்று சிந்தித்த படியே மெல்ல விசாரிக்கத் தொடங்கினார். அந்த வழியே உணவுத்தட்டை ஏந்திச் சென்ற ஒரு பணியாளரை அழைத்து, 'ஆமா, யாருப்பா இந்த ஆளு?' என்று சாடையாக கையைக் காட்டி கேட்டார்.
'ஐயா, உங்களுக்குத் தெரியாதா? இவருதான் பிரபலமான சாங் போச்சி'
'ஐயோ, சாங் போ ச்சியா? எனக்குத் தெரியாம்ப் போச்சே' என்று புலம் பியபடியே அடித்துப்புரண்டுபோய் அந்த சாதாரண மனிதர் முன்னே நின்று கொண்டு, பல்லிளித்தபடியே கூழைக்கும்பிடு போட்டார் அறிஞர்.
அதைக் கண்டு புன்னகைத்த அந்த சாதாரண மனிதர், 'போதும், போதும், அப்பவே அரை வணக்கம் சொல்லிட்டீங்க. இப்போ மீதி அரைவணக்கம் சொன்னாலே போதும்,' என்றார். அறிஞரின் முகத்தில் அசடு வழிந்தது. இதைத்தான் உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்றார் வள்ளுவர்.