• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-10 18:46:07    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: வணக்கம் நேயர்களே. மீண்டும் உங்கள் அனைவரையும் இன்றைய நேயர் நேரம் நிகழ்ச்சியின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளைக் கேட்டு கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களூடாக எமக்கு ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி இன்றைய நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.

க்ளீட்டஸ்: நிகழ்ச்சியின் முதல் கடிதம்தஞ்சை ஒரத்தநாடு பி. ரமேஷ் எழுதியது. அக்டோபர் 30ம் நாள் இரவு ஒலிபரப்பில் உலகச் செய்திகள் மற்றும் சீன மகளிர், சீன உணவு அரங்கம் ஆகியவற்றை கேட்டேன். மகளிர் நிகழ்ச்சியில் ஆதரவற்ற 300 குழந்தைகளை பராமரிக்கும் பெண்மணியை பற்றிக் கேட்டபோது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. உணவு அரங்கம் நிகழ்ச்சியில் காளான் கோழிக்கறிக்கஞ்சி பற்றிய சமையல் குறிபு அருமை. நான் அசைவம் சாப்பிடுவதில்லை என்றாலும் குறிப்பெழுதி மற்றவருக்கு கொடுத்துள்ளேன். செய்திகளில் சீன ஆசியான் உச்சி மாநாடு, இலங்கையில் அரசுக்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை முயற்சி தோல்வி ஆகியவற்றை அறிந்துகொண்டேன் என்று எழுதியுள்ளார்.

கலை: அடுத்து மதுரை என். ராமசாமி எழுதிய நவம்பர் 23ம் நாள் சீன அரசுத்தலைவர் ஹூ சிந்தாவின் இந்திய பயணம் பற்றிய கடிதம். இந்தியாவும் சீனாவும் வர்த்தகம், இருதரப்பு முதலீடு, கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் உட்பட 13 துறைகளில் ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்திய கவுன்சில் சார்பில் நடைபெற்றக் கருத்தரங்கில் சீன அரசுத்தலைவர் ஹூ சிந்தாவ் ஒளிமயமான எதிர்காலத்தைற்காக இணைந்து பணியாற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். சுயநலத்திற்காக சீனா எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாது, எல்லை பிரச்சனையை தீர்ப்பதே முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 2007ம் ஆண்டு சீன இந்திய ஒத்துழைப்பு ஆண்டாகும். சீன இந்திய ஒத்துழைப்பு அதிகரிக்க அம்ச திட்டம் பற்றியும் சீன அரசுத்தலைவர் ஹூ சிந்தாவ் குறிப்பிட்டது வரவேற்கத்தக்கது என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து சென்னை மணலிப் புதுநகர் நேயர் தங்க சங்கரபாண்டியன் எழுதிய கடிதம். சனிக்கிழமைகளில் ஒலிபரப்பாகி வரும் சீனத் தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் வாரந்தோறும் சீன தேசத்தின் பல்வகை இனங்கள் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. சீனாவின் தேசிய இனக்குடும்பங்களை விரிவாக அறிந்துகொள்ள இந்நிகழ்ச்சி நேயர்களுக்கு உதவுகிறது என்பது மகிழ்ச்சியான ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கலை: அடுத்து இலங்கை காத்தான்குடி எம் ஏ எம் சிஹாம் எழுதிய கடிதம். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை நானும் என் குடும்பத்தினருமாக கேட்டு வருகிறோம். சீன உணவு அரங்கம், சீனக்கதை, நேயர் விருப்பம், நேயர் நேரம் ஆகிய நிகழ்ச்சிகள் எனக்கு பிடித்தமானவை. எனது தம்பியும், தங்கையும் இந்நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்பதால் எனக்கு மகிழ்ச்சி. சீன வானொலிக்கு என் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக நான் பணம் சேமித்து இந்த கடிதத்தை அனுப்புகிறேன் என்று எழுதியுள்ளார். அன்புக்குரிய சிஹாம் எமது நிகழ்ச்சிகள் மீதான் உங்கள் ஆர்வத்தையும், எம்மோடு தொடர்புகொள்ளவேண்டும் என்ற தங்களின் ஆர்வத்தையும் அறிந்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சீன வானொலியின் நேயர் குடும்பத்தில் இணைய விரும்பும் உங்கள் ஆவல் நிச்சயம் நிறைவேறும். தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேளுங்கள்