• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-11 19:03:55    
மலை உச்சியில் உள்ள பியானோ

cri

பிரிட்டனின் மிக உயர் மலைச் சிகரமான பென்னிவிஸ் சிகரத்தில் ஏறுபவர்கள், வழியில் பயணிகள் வீசிய போத்தல், packing பை உள்ளிட்டக் குப்பைகளை காண்பது வழக்கம், ஆனால் ஒருமுறை வார இறுதி நாள் ஒன்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொண்டர்கள் இந்த மலையில் ஏறிய போது, மிகவும் வியப்படைந்தனர். கடல் மட்டத்திலிருந்து 1219 மீட்டர் உயரத்திலுள்ள ஒரு மலைச் சரிவில் சுமார் 103 கிலோகிராம் எடையுடைய ஒரு பியானோவை அவர்கள் கண்டறிந்தனர்.

பியானோவைக் கண்டறிந்தத் தொண்டர்கள் குழு ஒரு அறக்கட்டளை நிறுவனத்தைச் சேர்ந்தது. பென்னிவிஸ் மலையின் ஒரு பகுதியின் உரிமையாளராக இந்நிறுவனம் விளங்குகின்றது. மலை ஏறுபவர்கள் புதைத்த பல்வேறு அடையாள கற்களையும் குப்பைகளையும் அகற்றுவது என்பது இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். ஆனால் இந்த பியானோவை கண்டறிந்த பின், இந்த பியானோவை மலைச் சிகரத்தின் மேல் கொண்டு வந்த வழிமுறையும் இதற்கான கராணத்தையும் கண்டறிய தொண்டகள் எண்ணுகின்றனர். 35 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு சிறப்புத் திறன் காட்சி அரங்கேற்றத்தில், கென்னிஸ். கம்பெர் என்னும் ஒரு ஆண் இந்த பியானோவை தனியாகவே மலை சிகரத்துக்கு கொண்டு வந்தார் என்பதைத் தொண்டர்கள் ஒரு நாள் இரவு கண்டறிந்தனர்.

"அது கண்டிப்பாக என்னுடைய பியானோ தான்" என்று இப்பொழுது 64 வயதாகும் கம்பெர் the times என்னும் செய்தித்தாளின் செய்தியாளரிடம் தெரிவித்தார். 1971ஆம் ஆண்டு, ஒரு பியானோவை பென்னிஸ் மலைச் சிகரத்தில் ஏற்றிச் செல்வதில் அதிக ஆர்வம் கொண்ட அவர் மிகக் கடும் பயிற்சியில் ஈடுபட்டார். அந்த ஆண்டு ஜூலைத் திங்களில் அவர் ஒரு முயற்சியில் ஈடுபட்டார். 159 கிலோகிராம் எடையுடைய ஒரு பியானோவை தம் முதுகில் வைத்து மலை ஏறத் துவங்கினார். ஆனால் சுமார் 305 மீட்டர் உயரம் ஏறிய போது, இந்த பியானோவின் எடை மிக அதிகமாக இருந்ததால், பியானோவுடன் சேர்ந்து அவரும் கீழே விழத் துவங்கினார். சுமார் 30 மீட்டர் கீழே விழுந்த போது, பியானோ முழுமையாக உடைந்து சிதறியது.

ஆனால் மரண விளிம்பிலிருந்து தப்பி பிழைத்த கம்பெர் 3வது முயற்சியைக் கைவிடவில்லை, இதே ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அவர் இரண்டாம் முறையாக முயற்சித்தார். இந்த முறை, அவர் 113 கிலோகிராம் எடையுடைய ஒரு பியானோவை தேர்ந்தெடுத்தார். இந்த முறை 426 மீட்டர் உயரத்தை எட்டிய போது, அவர் காயமடைந்தார். செப்டம்பர் திங்களில் அவர் இறுதியில் 103 கிலோகிராம் எடையுடைய ஒரு பியானோவை பிரிட்டனின் மிக உயரமான பென்னிவிஸ் மலைச் சிகரத்தில் வெற்றிகரமாக ஏற்றிச் சென்றார். அத்துடன் மலை உச்சியில் அவர் இந்த பியானோவை பயன்படுத்தி, "வீரமிக்க ஸ்காட்லாந்து"என்ற இசையை இசைத்தார். கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் என்னுடைய இந்த வெற்றிகரமான சவால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் கம்பெர்.
இந்த பியானோவை மலைச் சிகரத்தில் ஏற்றிச் சென்ற போது, கம்பெர் தமது அனைத்து சக்தியையும் முழுமையாக பயன்படுத்தியதால், அவர் மலை இறங்கிய போது, உடல் தடுமாற்றத்துடன் கீழே நடந்து வந்தார். அந்த பியானோ மலைச் சிகரத்தில் நிலையாக வைக்கப்பட்டுள்ளது.