• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-12 19:39:18    
திபெத் பொருளாதார வளர்ச்சி

cri
கடந்த ஆறு ஆண்டுகளாக திபெத் பொருளாதாரம் 12 விழுக்காட்டுக்கு மேல் அதிகரிப்பு என்ற வேகத்தில் வளர்ச்சியடைந்துவருகின்றது என்று சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் Qiangba Puncog கூறியுள்ளார். லாசாவில் நடைபெற்றுவரும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவைக் கூட்டத்தில் அரசுப் பணியறிக்கையை சமர்ப்பித்த போது அவர் இதைத் தெரிவித்தார். 2000ஆம் ஆண்டில், திபெத் முழுவதிலுமுள்ள  மொத்த உற்பத்தி மதிப்பு, 1200 கோடி யுவானுக்குட்பட்டது. ஆனால் 2006ஆம் ஆண்டில் இது 2900 கோடி யுவானாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகின்றது. திபெத் பொருளாதாரத்தின் விரைவான வளர்ச்சிக்கு, முதலீடு, நுகர்வு, வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவை காரணங்களாகும். கடந்த ஆண்டில், திபெத்தில் நிறைவேற்றப்ட்ட நிலையான சொத்து முதலீட்டுத் தொகை 2300 கோடி யுவானைத் தாண்டியுள்ளது என்றும் சுற்றுலா பயணம், கார், உறைவிடம், உணவு, பொழுதுப்போக்கு ஆகியவற்றுக்கான நுகர்வும் தொடர்ந்து அதிகரித்துள்ளது என்றும் Qiangba Puncog கூறினார்.